சிரிங்க சார்.. கைய போடுங்க சார்.. தூங்கி 2 வாரம் ஆச்சு சார்.. நடிகரை வச்சு செய்யும் கமலியன்ஸ்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து தான் பேசியது குறித்து விளக்கமளித்ததை தொடர்ந்து அவரை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல் போஸ்டரில் சாணி அடித்ததாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதனால் சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் லாரன்ஸ். இந்நிலையில் இன்று கமலை சந்தித்து தான் பேசியதே வேறு, சிலர் திரித்துக் கூறிவிட்டனர் என தான் பேசியது குறித்து விளக்கியுள்ளார்.

கமலுக்காக விடுகிறோம்
பின்னர் கமலை சந்தித்த அவர், கமலுடன் எடுத்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த கமலியன்ஸ், நீங்கள் அந்த மேடையில் பேசியது தவறுதான், ஆனாலும் கமலுக்காக உங்களை விடுகிறோம் என தெரிவித்துள்ளனர்.

உங்க ரூட்டில் போங்க
மேலும் சிலர் யார் என்ன சொன்னாலும் நீங்க உங்க ரூட்டில் போங்க என சப்போர்ட் செய்துள்ளனர். சிலர் கமலை ஃபோர்ஸ் செய்து வான்ட்டடாக தோள் மீது கையை போடச் சொல்லி போட்டோ எடுத்ததாக கலாய்த்துள்ளனர்.
இனி செய்யாதீர்கள்
நீங்கள் அந்த மேடையில் அவ்வாறு பேசியது தவறுதான் அதை யாராலும் மறுக்க முடியாது. அவர்(திரு.கமல்)பெருந்தன்மையாக நடந்து கொண்டார். ஒருவரை திருப்திப்படுத்த இன்னொருவரைப் பற்றி பேசுவது தவறுதான். இனி அந்த தவறை செய்யாதீர்கள்.. என்கிறார் இவர்.
அருமை சிறப்பு
அருமை அருமை சிறப்பு.. என்று லாரன்ஸை பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
அடைக்கலம் புகுந்ததால்..
தலைவரிடம் அடைக்கலம் புகுந்ததால் மன்னித்தோம் போ.. என்கிறார் கமலின் இந்த ரசிகர்.
அடி ரொம்ப பலமோ?
லாரன்ஸின் இந்த போட்டோவை பார்த்த இவர் அடி ரொம்ப பலமோ.. என்று கேட்டுள்ளார்.
உங்க ரூட்ல போங்க
குரைக்காத நாயும் இல்லை...
குறை சொல்லாத வாயும் இல்லை....யார் என்ன சொன்னாலும் உங்க ரூட்ல போய்க்கிட்டே இருங்க அண்ணா.. என்று கூறுகிறார் இவர்.
கமலிடம் சரண்டரா?
சரண்டர் ஆஆஆஆஆஆஅ என கிண்டலாக கேட்கிறார் இந்த நெட்டிசன்.
பொழச்சு போங்க
இனியாவது மேடையில் எதை பேசணும்னு யோசிச்சி பேசுங்க இனிமே திட்டமாட்டோம் பொழச்சி போங்க.....#அன்பே_சிவம் என்கிறார் கமலின் இந்த ரசிகர்.
கமலியன்ஸ் வெறுத்துருப்பாங்க
நீங்க இதை செஞ்சது நல்லது.. இல்லன்னா வாழ்க்கைபூரா கமலியன்ஸ் உங்களோட இந்த சில்லி பிஹேவியருக்காக வெறுத்துருப்பாங்க என்று கூறுகிறார் இவர்.
லைட்டா சிரிங்க சார்
லைட்டா சிரிங்க சார்.. கைய மேல போடுங்க சார்.. ப்ளீஸ்.. தூங்கி 2 வாரம் ஆச்சு சார்.. என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
பிழைத்து போ தம்பி
பிழைத்து போ தம்பி.. இனிமேலாவது மேடை கிடைத்து விட்டதே என்பதற்காக பேசாமல், நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்..! என்று கூறுகிறார் இவர்.


Click it and Unblock the Notifications











