சீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் படு பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ செம சென்டிமெண்ட்டாக இருந்தது. பாலாஜியை தனது குழந்தை என கூறி கதறினார் அர்ச்சனா.
சற்று நேரம் முன்பு வரை அவரை கார்னர் செய்து சண்டை போட்டிருந்த அவர்கள் திடீரென மாறியது ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியது.
பாட்டை போட்டுட்டீங்க
புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அடப்பாவிகளா இவ்ளோ சீக்கிரம் ஒன்னு சேர்ந்துட்டிங்களே என கலாய்த்து வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்,
அடேய் என்னடா அதுக்குள்ளேயும் ஆராரிரோ பாட்டை போட்டுடீங்க! என கிண்டலடித்துள்ளார்.
குழந்தையா இந்த பயில்வான்?
அர்ச்சனா, பாலாஜியை தனது குழந்தை என்று கூறியதை கேட்ட இந்த நெட்டிசன், இவ்ளோ பெரிய குழந்தையா இந்த பயில்வான்! என கேலி செய்துள்ளார்.
யாரோட ஐடியா இது?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன அர்ச்சனா பயப்படுறியா? பாலாவை பார்த்து.. யார் இந்த ஐடியா கொடுத்தது ரியோ? ஓவரா தான் சமாதான பண்ற பாலாஜி! என கிண்டலடித்துள்ளார்.
முடிவுக்கு வந்தா சந்தோசம்
மற்றொரு நெட்டிசனான இவர் கோபம் இருக்குற இடத்துலதான் குணம் இருக்கும் அர்ச்சனா, பாலாஜி.
ஆனா அந்த கோபம் பலமுறை நம்ம செய்யுறது தவறா சரியானு கூட யோசிக்க வைக்க விடாது. இவன் அவங்கள குறை சொல்லுறதும் அவங்க இவனை குறை சொல்லுறதும் ஒரு முடிவுக்கு வந்தா சந்தோசம் தான் என பதிவிட்டுள்ளார்.
மூக்கை நுழைச்சு மாட்டிக்கிட்டான்
பாலாஜியும் அர்ச்சனாவும் ஒன்னு சேர்ந்ததை பார்த்த இந்த நெட்டிசன், ரியோவை குறிப்பிட்டு தம்பிதான் தேவை இல்லாம இடையில மூக்க நுழைச்சு மாட்டிகிட்டான் என குறிப்பிட்டுள்ளார்.
என்னா ஸ்பீடு
அதான் அல்ரெடி சொன்னோமே.. இது ஸ்க்ரிப்ட் டா நம்பாதீங்கன்னு.. என்னதான் ஸ்க்ரிப்ட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா பிக்பாஸ். சீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் ஒன்னு சேர்ந்துக்க மாட்டாங்களே, என்னா ஸ்பீடு என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.
அழற சீன் செட் ஆகல
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு!... பயில்வானுக்கு அழுகிற சீன் செட் ஆகல!... அதனால நல்லா அதட்டல் சீனா பார்த்து கொடுய்யா என கிண்டலடித்துள்ளார்.
சூப்பரப்பு..
அடேங்கப்பா!... இந்த பிக்பாஸ் குடோன்லதான் உண்மையான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மகன். மருமகள் , மருமகன், பேரப்பிள்ளைகள்.. மாமனாரு, மாமியார் எல்லோரும் இருக்காங்க!... சூப்பரப்பு.. என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.
சொல்ல முடியாதுல்ல..
தாய்மை உணர்வு புரியுது! அதே சமயம் குழந்தைனு சொல்லி குரல அடைக்கவும் கூடாது.. பெத்த பிள்ளையா இருந்தாலும் அவங்களுக்கும் அறிவு இருக்குனு மதிப்பு கொடுக்கனும் எந்த அளவுக்கு திட்டிறீங்களோ!
நாம செய்றது எல்லாம் சரினு சொல்லமுடியாதுல்ல! என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











