அடுத்த வாரம் கொடும்பாவி கட்டி எரிக்க விடுவாங்களோ.. பிக்பாஸ் புரமோவை கிழிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில், பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் நாமினேஷன் புராசஸ் இடம் பெற்றுள்ளது.
இதில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களின் போட்டோக்களை தீயில் இட்டு கொளுத்துவதாக உள்ளது.

எரியும் தீயில் போட்டு
அதன் படி போட்டியாளர்கள் தங்களுக்கு வேண்டாத இரண்டு போட்டியாளர்களை நாமினேட் செய்து, அவர்களின் போட்டோக்களை எரியும் தீயில் போட்டு கொளுத்துகின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள், அடுத்து நாமினேஷன்ல கொடும்பாவியை எரிக்க சொல்வீர்களா என கேட்டுள்ளனர்.
கலகத்தை மூட்ட
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கலகத்தை மூட்ட என்னென்ன வேலை பார்க்க வேண்டியிருக்கு! என கேட்டுள்ளனர்.
போகின்னு எரிக்கிறானுக
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் போட்டோக்களை எரிக்கப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், டேய்.. ஆயுத பூஜை டா இன்னைக்கு, இவனுக போகி னு நினைச்சி எல்லாத்தையும் எரிக்கிறானுக என கூறியுள்ளார்.
போகி கொண்டாட போறீங்களா?
புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர் வேண்டாததை கொளுத்தி போகி கொண்டாட போறீங்களா பெரியபாசு! என கலாய்த்துள்ளார்.
எதிர்பார்க்கலாம்
மற்றொரு நெட்டிசனான இவர், இன்றைக்கு நாமினேஷன்ல பாலா சனம் ரியோ அனிதா இவங்களை கண்டிப்பாக எதிர் பார்க்கலாம். ஆஜித் சுரேஷ் சக்கரவர்த்தி அடிஷனலா இருக்கவும் வாய்ப்பு இருக்கு என்று கூறியுள்ளார்.
வன்முறையை தூண்டுது
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், போட்டியாளர்களின் போட்டோக்கள் எரிக்கப்படுவது வன்முறையை தூண்டுகிற மாதிரி இருக்கே பிக்பாசு! என கூறியுள்ளார்.
சண்டை தொடரும்
இந்த பிரச்சனைய தெரிஞ்சோ தெரியாமலோ ஆரம்பிச்சது ரியோ ராஜ். ஆனா அதை வச்சி கேம் விளையாடுறது பாலாஜி முருகதாஸ். இவனுங்க ரெண்டு பேருக்கும் உள்ள ஆமா சாமி போடுற குரூப் இருக்குற வரை இவனுங்க சண்டை தொடரும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
எரிப்பது நல்லதல்ல
புரமோவில் போட்டோக்கள் எரிக்கப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படம் எரிப்பது நல்லது இல்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற நாமிஷேனை தவிருங்கள் பிக்பாஸ் என கோரிக்கை விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.
கீழ்த்தரமான வேலைகள்
மற்றொரு நெட்டிசனான இவர், இது மாதிரியான நாமினேசன் நல்லதல்ல. மனதை அதிகம் காயபடுத்தும். கன்டென்ட்க்காக கீழ்த்தரமான வேலைகளை செய்யாதே பிக்பாஸ் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
அடுத்தவாரம் கொடும்பாவி?
இந்த வாரம் நாமினேஷனில் போட்டோக்கள் எரிக்கப்படுவதை பார்த்த இந்த நெட்டிசன், அடுத்த வாரம் நாமினேஷன்ல கொடும்பாவி கட்டி எரிக்க விடுவார்கள் போல என மரணமாய் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











