ஆத்தி இவங்க ரெண்டு பேரும் எமகாதகனுங்க ஆச்சே.. பிக்பாஸ் புரமோவை பார்த்து கிலியாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான புரமோவில் இரண்டு போட்டியாளர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் புதிய டாஸ்க்கை கொடுக்கிறார் பிக்பாஸ். இது இன்று வெளியான மூன்றாவது புரமோவின் மூலம் தெரிந்தது.

இதில் போட்டியாளர்களை ஜோடி ஜோடியாகவும் பிரித்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது புரமோவில் காட்டப்பட்ட ஒரு ஜோடியை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.

மரண கலாய்

மரண கலாய்

அதாவது பிரியலியன்ட்டாக ஆடி வரும் சுரேஷ் சக்கரவர்த்தியும் முரட்டுத்தனமான உடம்பை வைத்துள்ள பாலாஜி முருகதாஸும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் மூன்றாவது புரமோ குறித்தும் டாஸ்க் குறித்தும் நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

 திகில் படம் பார்க்குற எஃபெக்ட்

திகில் படம் பார்க்குற எஃபெக்ட்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னாங்கடா இது! டாஸ்க் பேப்பரை படிக்கும்போதே ஏதோ திகில் படம் பார்க்கிற மாதிரி எஃபெக்ட் கொடுக்குறீங்க! என கேட்டுள்ளார்.

 லூசு ஆயிட்டாரு போல

லூசு ஆயிட்டாரு போல

மற்றொரு நெட்டிசனான இவர், பிக்பாஸ் கொடுத்துள்ள டாஸ்க்கை கேட்டுவிட்டு என்னடா விளையாட்டு இது
இந்த சீசன்ல பிக்பாஸ லூசு ஆயிட்டாரு போல.. என கேலி செய்துள்ளார்.

பைத்தியமாக்குறாரு

பைத்தியமாக்குறாரு

இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த வாரம் நாமினேஷன் செய்யப்பட மாட்டார்கள் என கூறுவதை கேட்ட இந்த நெட்டிசன், இப்படி சொல்லி சொல்லியே எல்லோரையும் பைத்தியமா மாத்திவிடுகிறாரு இந்த பிக்பாஸ் என கூறியுள்ளார்.

 எமகாதகனுங்க ஆச்சே..

எமகாதகனுங்க ஆச்சே..

சுரேஷ் சக்கரவர்த்தியும் பாலாஜி முருகதாஸும் இணைந்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், ஆத்தி இவனுங்க ரெண்டு பேரும் எமகாதகனுங்க ஆச்சே என்றும்,
ஒருத்தன் மூளைக்காரன்.. ஒருத்தன் குஸ்திகரான்.. எனக்கு என்னமோ இவனுங்க தான் ஜெய்ப்பானுங்க போல இருக்கு என்று கூறியுள்ளார்.

 எப்படி கண்டுபிடிக்கிறீங்க?

எப்படி கண்டுபிடிக்கிறீங்க?

பிக்பாஸ் டாஸ்க்கில் கொடுத்துள்ள விளையாட்டை கேட்ட இந்த நெட்டிசன், இந்த விளையாட்டையெல்லாம் எப்படியப்பா கண்டுபிடிக்கிறீங்க? என்று கேட்டிருக்கிறார் இவர்.

 ஒத்தையில நிக்கேன்

ஒத்தையில நிக்கேன்

பிக்பாஸ் வேலைய மிச்சம் பண்ணி கொடுக்கறது மொட்ட அங்கிள் தான்.. மொட்ட அங்கிள் ஒத்தையில நிக்கேன்,
மொத்தமா வாங்கலே என்று அவருடைய போட்டோவை ஷேர் செய்து கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X