நீங்க ரொம்ப லேட்டு ஆண்டவரே.. ரேகா நேற்றே வீட்டுக்கு போயிட்டாங்களாம்! பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸில் எவிக்ஷன் பற்றி கூறும் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் எவிக்ஷன் குறித்த சஸ்பென்சை நடிகர் கமல்ஹாசன் உடைப்பதாக உள்ளது.

இந்த வாரம் யார் எவிக்ட் ஆக போகிறார்கள் என்ற பதைபதைப்பில் உள்ளனர் ஹவுஸ்மேட்ஸ். ரேகாதான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார்.

கமலை கலாய்த்து..

கமலை கலாய்த்து..

இதற்கான ஷுட்டிங் நேற்றே முடிந்த நிலையில் நடிகை ரேகா வெளியேற்றப்பட்ட தகவல் தீயாய் பரவியது. இந்நிலையில் இன்று புதிதாய் கமல் சொல்வது போல் வெளியான புரமோவை பார்த்த நெட்டிசன்கள், கமலை கலாய்த்துள்ளனர்.

ஏன் ஆண்டவரே!

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வயதானவர்களை முதலிலேயே வீட்டுக்கு அனுப்பி விடுறீங்களே ஏன் ஆண்டவரே! என கேட்டுள்ளார்.

லேட்டு ஆண்டவரே!

பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க ரொம்ப லேட்டு ஆண்டவரே!... ரேகா நேற்றே வீட்டுக்கு போய்விட்டாங்களாம்! என கலாய்த்துள்ளார்.

இவ்வளவு பில்டப்பா..!

மற்றொரு நெட்டிசனான இவர் அதான் ரேகா மேடம்னு தெரியுமே! இந்நேரம் அவங்க வீட்டுல மீன் குழம்பு வச்சு சாப்பிட்டுகிட்டு இருப்பாங்க! இந்த ப்ரோமோவுக்கு இவ்வளவு பில்டப்பா..! என கேட்டுள்ளார்.

பிக்பாஸுக்கா..

இந்த புரமோ பிக்பாஸுக்கா.. இல்லை கமல்ஹாசனுக்கா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். அந்தளவுக்கு புரமோ முழுக்க கமலே வியாப்பித்துள்ளார்.

ரேகாவை தள்ளி விட்டுட்டார்

இருந்தாலும் ரேகா பொண்ணுக்கு இவ்வளவு கஸ்டத்தை கமல் சார் கொடுத்து இருக்க வேணாம். அன்று காதலென்ற பெயரில் தற்கொலை என்று சொல்லி ரேகாவை தள்ளி விட்டுட்டார். இன்று பிக்பாஸென்ற பெயரில் வெளியே பிடித்து தள்ளிவிட்டார். என கேலி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X