சும்மாவே புரமோக்கும் எபிசோடுக்கும் சம்பந்தம் இல்லாம குழம்பிட்டு இருக்கோம்.. இதுல இப்டி பேசினா எப்டி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் கமல் வார்த்தை ஜாலம் செய்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் பண்ணியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் மீன் மீன் என சனம் ஷெட்டியையும் ரேகாவையும் மீன் பண்ணி வார்த்தையிலேயே புகுந்து விளையாடிக்கிறார். கடந்த வாரம் டபுள் மீனிங்கில் அரசியல் பேசிய கமல் இந்த வாரமும் இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார்.

இப்படி பேசினா எப்படி?
இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் பேசுறீங்கக தலைவரே ஒன்னும் புரியல.. ஏற்கனவே விஜய் டிவி போடுற புரமோவுக்கும் புரோகிராமுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. இதுல நீங்க வேற சம்பந்தமில்லாமா பேசினா எப்படி என பளீச்சென கேட்டுள்ளனர்.

நீங்க பயப்படுறீங்க..
கமலின் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், முதல் சீசன்ல உங்களை கண்டு அவங்க பயந்தாங்க! ஆனா இப்ப அவங்கள கண்டு நீங்க ரொம்பவும் பயப்படுறீங்க ஆண்டவரே! என கூறியுள்ளார்.

இன்னும் ஆரம்பிக்கலையா?
இரண்டு புரமோக்களிலுமே கமல் மட்டுமே பேசுவதை கவனித்த இந்த நெட்டிசன், அட.. ஆண்டவரே இன்னும் ஆரம்பிக்கலையா? நிகழ்ச்சியை! என கேட்டு கிண்டலடித்துள்ளார்.

பார்த்து சொல்லுப்பா
அதே பாணியில் மற்றொரு நெட்டிசனான இவர், ஆண்டவர்.. எப்போ புரோகிராம ஸ்டார்ட் பண்ணுவார் கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா! என மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார்.

மீன் குழம்பு வச்சு
கமல் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், சும்மாவே போடூர புரோமோக்கும் எபிசோடுக்கும் சம்பந்தம் இல்லாம குழம்பிட்டு இருக்கோம் இப்போ நீங்க இப்படி மீன் குழம்பு வைத்து குழப்பினா எப்படி ஆண்டவரே என கேட்டுள்ளார்.

புரிஞ்சா நல்லாருக்கும்
கமல் பேசும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நானும் இந்த புரமோவ பத்து தடவைக்கு மேல பாத்துட்டுட்டேன். ஆனா நீங்க சொல்லுற மாதிரி புரியலைனு சொல்லல ஆனா புரிஞ்சா நல்லா இருக்கும்னு சொல்லுறேன் என கமலை கலாய்த்துள்ளார்.

வாழ்கை போயிடுமே?
மற்றொரு நெட்டிசனான இவர், அய்யா நீங்க எப்ப தெளிவா பேசுவீங்க.. தப்பி தவறி நீங்க முதல்வர் ஆயிட்டீங்கன்னா எங்க நிலைமை.. நீங்க பேசுறதுக்கு விளக்கம் தேடியே எங்க வாழ்க்கை போயிடுமே என கமலை கிண்டலடித்துள்ளார்.

சுத்தி வளைச்சு பேசினா?
மற்றொரு நெட்டிசனான இவர், நீங்க சும்மா பேசுனாலே ஒன்னும் புரியாது.. இதுல சுத்தி வளைச்சு பேசுனா எப்படி தலைவரே புரியும் என கமல் பேசியது புரியவில்லை என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











