தகிட.. தகிட.. தகிட.. டான்ஸ் மோடில் லக்ஷ்மி மேனன்.. எதுக்கு ரிஸ்க் என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: டான்ஸ் மோடில் இருப்பதாக நடிகை லக்ஷ்மி மேனன் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர்.

Recommended Video

அழகிய TV SISTERS |ANCHOR DHEEPTHI CHAT | FILMIBEAT TAMIL

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் லக்ஷ்மி மேனன். மலையாள படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அவர் தமிழில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து சுந்தரப்பாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் லக்ஷ்மி மேனன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் றெக்க. அவரது நடிப்பில் உருவான சிப்பாய் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

டான்ஸ் பயிற்சி

டான்ஸ் பயிற்சி

2016ஆம் ஆண்டுக்கு பிறகு லக்ஷ்மி மேனன் நடிப்பில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. லக்ஷ்மி மேனன் ஓவர் வெயிட் போட்டு எடை கூடியதால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதாக தகவல் வெளியானது. அதோடு அவர் டான்ஸ் சொல்லிக் கொடுப்பதாக செய்திகள் வெளியானது.

ஆடியிருக்கமாட்டார்

ஆடியிருக்கமாட்டார்

லக்ஷ்மி மேனன் நடித்த பெரும்பாலான படங்களில் பெரிதாக நடனம் ஆடியிருக்கமாட்டார். அனைத்தும் மான்டேஜ் பாடல்களாகவே இருக்கும். சில பாடல்கள், நடப்பது, நிற்பது என இருக்கும். பாண்டிய நாடு படத்தில் தான் ஃபை ஃபை பாடலில் முதல் முறையாக நடனமாடியிருப்பார்.

வழுக்கி விழுந்தார்

வழுக்கி விழுந்தார்

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனன் வீட்டில் நடன பயிற்சி மேற்கொண்ட போது வழுக்கி விழும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்த லக்ஷ்மி மேனன், யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என பதிவிட்டிருந்தார்.

தகிட தகிட தகிட

தகிட தகிட தகிட

இந்நிலையில் சில நடன போட்டோக்களை ஷேர் செய்துள்ள லக்ஷ்மி மேனன், டான்ஸ் மோட் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், தகிட திகிட தகிட என கமெண்ட் பதிவிட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

 ஏன் ரிஸ்க் எடுக்கறீங்க?

ஏன் ரிஸ்க் எடுக்கறீங்க?

இன்னும் சில நெட்டிசன்கள், கொஞ்ச நாட்களுக்கு முன்பு தானே விழுந்து வாரினீர்கள் அதற்குள் ஏன் மீண்டும் ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், நல்ல நடிகை நீங்கள் உங்களை மீண்டும் பிக் ஸ்க்ரீனில் பார்க்க ஆவலோடு இருக்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X