மலை.. ஆறு.. மாலுவோட வீடு.. 'டோரா' போல இருக்கும் மாஸ்டர் ஹீரோயின்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
மலையாள தேசத்தை பூர்விகமாக கொண்டவர் மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் நடிகை மாளவிகா மோகனன்.
அதனை தொடர்ந்து நிர்ன்னயாக்கம் என்ற மற்றொரு மலையாள படத்தில் நடித்த அவருக்கு கன்னம் மற்றும் இந்தி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன்.

விஜயுடன் ஜோடி
அதனை தொடர்ந்து தமிழில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். முதல் படத்திலேயே ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து மாஸ் ஓபனிங் பெற்றார் நடிகை மாளவிகா மோகனன். அதன்பிறகு அதிர்ஷ்ட லட்சுமி வாசல் கதவை தட்ட, மாஸ் நடிகரான விஜயுடன் ஜோடி போட்டுள்ளார்.

ஹீரோ படம்
ஆனால் மாஸ்டர் படம் லாக்டவுன் காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தெலுங்கில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

அடிக்கடை டைம் லைன்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது க்யூட், ஹாட் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அதோடு சமூக வலைதளங்களில் ஏதாவது ஒன்றை பேசி அடிக்கடி டைம் லைனிலும் இருந்து வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.

பழைய போட்டோ
ஒன்று படுக்கை அல்லது படிப்பு என இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன், கடந்த சில நாட்களாக தனது பழைய போட்டோக்களை த்ரோபேக் செய்து வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் அனிருத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்த நடிகை மாளவிகா மோகனன். தற்போது மேலும் ஒரு பழைய போட்டோவை த்ரோபேக் செய்துள்ளார்.

டோரா போல்
அதில் போனி டைலுடன் முதுகில் பேக்கை மாட்டிக் கொண்டு சுட்டி டிவியில் வரும் டோராவை போல் உள்ளார் மாளவிகா மோகனன். மலைகள் + பின்னால் பேக் = மகிழ்ச்சியான நான் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் மாளவிகா மோகனன். அதனை பார்த்த நெட்டிசன்கள், மலை.. ஆறு.. மாலுவோட வீடு.. டோரா டயலாக்கை கூறி கிண்டலடித்துள்ளனர்.

மூட் அவுட்..
இன்னும் சில நெட்டிசன்கள்.. நோட்டிஃபிகேஷன் வந்ததும் நான் கூட என்னமோன்னு இமாஜின் பண்ணிட்டு வந்தேன் என்றும் இந்த போட்டோவை பார்த்து மூட் அவுட் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மாளவிகா மோகனின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











