செம டஃப் தலைவா.. வேற லெவல் ஜி.. மனோ பாலாவின் போட்டோ ஷுட்டை பார்த்து பங்கம் செய்யும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் மனோ பாலாவின் தெறி போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
நடிகர் மனோ பாலா தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் வலம் வருகிறார். அதோடு இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மனோ பாலா அவ்வப்போது ஹீரோயின்களுக்கு போட்டியாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

ரகம் ரகமாக..
தான் எடுக்கும் அசத்தல் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார் நடிகர் மனோ பாலா. நெட்டிசன்கள் என்ன கலாய் கலாய்த்தாலும் அதற்கெல்லாம் அசராமல் ரகம் ரகமாக போட்டோக்களை எடுத்து தள்ளி வருகிறார்.

யூத் கெட்டப்பில்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட படுக்கையறை போட்டோ சமூக வலைதளத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் செம யூத் கெட்டப்பில் அட்டகாசமான போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளார்.

பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்
நாங்களும் டஃப் கொடுப்போம்ல என்ற கேப்ஷனுடன் சேரில் அமர்ந்து அப்படியும் இப்படியும் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது போட்டோக்களை வைத்து பங்கமாக மீம்ஸ் வெளியிட்டும் கலாய்த்தும் வருகின்றனர்.

செம டஃப்..
மனோ பாலா சேரில் அமர்ந்திருக்கும் போட்டோவை நடிகை ஒருவர் சேரில் அமர்ந்து போஸ் கொடுக்கும் போட்டோவுடன் ஒப்பிட்டுள்ளனர். மேலும் செம டஃப் தலைவா என்று கேப்ஷன் கொடுத்து பங்கம் செய்துள்ளனர்.

தலைவன் வேற ரகம்
மனோ பாலா போட்டோ ஷுட்டை பார்த்த இந்த நெட்டிசன் தர்பார் படத்தில் இடம் பெற்ற "கண்ணுல திமிரு உன்னை ராட் எடுக்க வந்தாரு, தலைவன் வேற ரகம் பார்த்து உசாரு" பாடல் வரிகளை குறிப்பிட்டு அனிருத் பேக் கிரவுண்ட் மியூஸிக்கில் ரஜினியை போல் இதை ஃபீல் பண்ணுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இவங்களுக்கா பாவா..
மற்றொரு நெட்டிசனான இவர், யாருக்கு டஃப் கொடுப்பீங்க, இவங்களுக்கா பாவா என இரண்டு நடிகைகளின் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்துள்ளனர். இதுபோன்று ஏராளமான கலாய் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











