twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க!

    |

    Recommended Video

    Super Model Meera Mithun : நான் பெண்தான்..! நிரூபிக்கும் மீரா மிதுன்-வீடியோ

    சென்னை: சென்னை போலீஸ் குறித்து பிரதமரிடம் புகார் கூறிய மீரா மிதுனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே நடிகை மீரா மிதுன் பெரும்பாலான மக்களுக்கு பரிட்சயம் ஆனார். தொடர்ந்து யாரையாவது குறை சொல்லி, வம்புக்கு இழுத்து டைம் லைனிலேயே இருந்து வருகிறார்.

    தமிழக அரசையும் சென்னை போலீஸையும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார் மீரா மிதுன். இந்நிலையில் தனக்கு அநீதி இழைத்த சென்னை போலீசாரை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என டிவிட்டரில் புகார் கூறிய மீரா மிதுன் அந்த டிவிட்டை பிரதமர் மோடிக்கும் டேக் செய்தார்.

    நெட்டிசன்ஸ்

    நெட்டிசன்ஸ்

    இதனை கவனித்த நெட்டிசன்கள் இப்போது சினிமாவையும் சினிமாக்காரர்களையும் விட்டுவிட்டு சென்னை போலீஸ்க்கு குறி வைத்து விட்டீர்களா என கேட்டு வருகின்றனர். மேலும் உங்களுடைய புகாரை மாநில அரசிடம் சொல்ல வேண்டியதுதானே எதற்கு பிரதமரை டேக் செய்தீர்கள் என கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

    உள்ளே போகப்போறீங்க

    'பிரதமரை டேக் செய்துவிட்டு நீங்கள்தான் உள்ளே போகப்போகிறீர்கள்' என்று தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

    கிறுக்கன் ஆக்கிறுவீங்க..

    ஜோ, நவீன், சேரன்.. இப்போ சென்னை போலீஸ்.. அடுத்து முதல்வர், பிரதமர், பக்கத்து நாட்டு பிரதமரும் எனக்கு அநீதி இழைச்சுட்டாங்கன்னு போட்டாலும் போடுவீங்க போல.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க.. என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

    ஸ்ட்ரைட்டா பிஎம் தான்

    என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. சிஎம் கிட்டலாம் பேச மாட்டீங்க.. ஸ்ட்ரைட்டா பிஎம் தான்.. ஓ.. நான் மறந்துட்டேன்.. நீங்க நேஷனல் ஃபேம் செலிபிரிட்டில்ல.. என கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

    பப்ளிசிட்டி பைத்தியம்

    அட லூசு.. பிரதமர ஏன் டேக் பண்ணுற.. பப்ளிசிட்டி பைத்தியம்.. என்று கலாய்க்கிறார் இவர்.

    English summary
    Netizens making fun of Meera mithun for tagging modi in her tweet. Meera mithun complaints Modi about Chennai Police.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X