ரியோவுக்கு விஜய் டிவியின் மொரட்டு காளைன்னு நெனப்பு.. சேதாரம் உனக்குதான் தம்பி.. விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: சுரேஷ் சக்கரவர்த்தியிடம் எகிறும் ரியோவை வச்சு செய்துள்ளனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரியோ சக்கரவர்த்தியின் உண்மை முகம் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
அனிதா, சனம் ஷெட்டியை தொடர்ந்து ரியோ ராஜூம் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மல்லு கட்டி வருகின்றார். ரியோவின் பிஹேவிங் பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

ரசிகர்கள் விளாசல்
பிக்பாஸ் வீட்டில் குரூப்பிசம் இல்லை இல்லை என்று கூறிவிட்டு குரூப் ஃபார்ம் செய்து வருகிறார். யாரும் அவரிடம் எதுவும் பேசக்கூடாது என்று ஆர்டர் வேறு போடுகிறார். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.

மொரட்டு காளைன்னு நினைப்பு
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ரியோவுக்கு விஜய் டிவியின் மொரட்டு காளைன்னு நெனைப்பு போலிருக்கு! என கலாய்த்துள்ளார்.

கடிச்சு வையுங்க சார்
சுரேஷிடம் ரியோ பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், சுரேஷ் சக்கரவர்த்தியை டச் பண்ணா.. புரமோல வரலாம்னு யாரோ ரியோவுக்கு சொல்லீட்டாங்க போல.. சிலிர்த்துக்கிட்டு நிக்கிற சிங்கத்துக்கு பேன் பார்க்கிறதே இவன் வேலையா போச்சு... நல்லா கடிச்சு வையுங்க சார் என கூறியுள்ளார்.

சேதாரம் உனக்குதான்
மற்றொரு நெட்டிசனான இவர், மொட்ட பிளான் பண்ணி வந்துருக்கு!... ரியோ .. நீ பிளான் பண்ணாம வந்திருக்க!... சேதாரம் உனக்குதான் ரியோ! என எச்சரித்துள்ளார்.

குரூப்பிசம்னா என்ன?
ஏன் சார் இந்த க்ரூப்பிசம் குரூப்பிசம்னு சொல்றீங்களே அப்படினா என்ன.. என நக்கலாய் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தாங்கமாட்ட..
எப்பா ரியோ நீ பெரிய்ய ஹீரோன்னு நினைச்சுகிட்டு அடிதடியில் மாட்டிக்காதே!... நீ தாங்கமாட்ட! என்று சுரேஷிடம் பேசும் ரியோவை எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

வெளியே வா..
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், எப்பா ரியோ நீயெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட! கம்முனு வெளியே வா! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

எக்ஸ்பீரியன்ஸ் பத்தலை
ரியோவும் சுரேஷும் பேசும்போது இந்த சீன் தான் ஞாபகம் வருது... சாரி உங்களுக்கு.. எக்ஸ்பீரியன்ஸ் பத்தலை என கவுண்டமணி செந்திலை ஓட்டும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

பலியாடு ரியோ
சுரேஷ் சக்கரவர்த்தி எப்படின்னா குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பாரு ஆனா மத்தவங்க அடிச்சிப்பாங்க. இப்ப பலியாடு நம்ம ரியோ என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அடிச்சு காட்டுங்கடா..
பிக்பாஸின் இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னடா பேசிட்டு இருக்கீங்க யாரு பெருசுனு அடிச்சு காட்டுங்கடா... என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











