பிகில் படத்துக்கு எனக்கு ஏன்டா சிலை வச்சீங்க.. விஜய் சிலையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: பிகில் படத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் அவருக்கு வைத்துள்ள சிலையை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர்.
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியான நாள் முதலே பெரும் சர்ச்சைகளை சந்தித்து வந்தது. பிகில் படத்தின் கதைக்கும் மூன்று பேர் உரிமை கோரினர்.

நேற்று ரிலீஸ்
இதுதொடர்பாக உதவி இயக்குநர் செல்வா என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் படம் நேற்று காலை ரிலீஸானது.

வைரல் போட்டோ
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அவருக்கு வைத்த சிலையின் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

நெட்டிசன்ஸ் கிண்டல்
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த சிலையை நகைச்சுவை நடிகர் பாலாஜியுடன் ஒப்பிட்டுள்ளனர். பிகிலுக்கு சிலை வைக்க சொன்னா ஏன்டா எனக்கு வச்சீங்க என அவர் கேட்பது போல் டிவிட்டி அந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.
கலாய்
பிகில் படத்துக்கு எனக்கு ஏன்டா சிலை வச்சீங்க... என பாலாஜியின் போட்டோவை போட்டு கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
2 நாள் ஓடும் போல
டேய் எடிட்டிங் பண்ணவே இல்லையாடா பிகில் எடிட்டிங் பண்ணியே இவ்வளவு இருக்குன்னா.. எடிட்டிங் பண்ணாம இரண்டு நாள் ஓடும் போல படம்.. பிகிலே நான் அப்பிட்டே.. என கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











