மேய்க்கிறது எருமை.. இதுல என்ன பெருமை.. மீம் போட்ட விஜய் டிவியை மரண பங்கம் செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து மீம் வெளியிட்ட விஜய் டிவியியை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்துள்ளனர்.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
8 ஆண் போட்டியாளர்கள் 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மாற்றத்தை எதிர்பார்த்து
இவர்கள் எல்லோருமே திரைத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள்தான். ஏதோ ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற உள்ளது.

அவசர கதியில்..
கடந்த சீசன்களை காட்டிலும் மிக விரைவாக இந்த ஆட்டத்தை தொடங்கி விட்டார்கள் போட்டியாளர்கள். குறிப்பாக அனிதா சம்பத் அவசர கதியில் ஆட ஆரம்பித்து வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறார்.

அதிரடி புரமோக்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரமாக நாள்தோறும் மூன்று முதல் நான்கு புரமோக்கள் வரை வெளியாகி வருகிறது. ஒவ்வொரு புரமோவுமே அதிரடியாய் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கலாய்க்கும் விஜய் டிவி
சேனலில் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான விளம்பரங்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களை கலாய்க்கும் வகையில் விஜய் டிவி தனது சமூக வலைதள பக்கத்தில் மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளது.

ஆழ்ந்த சிந்தனை
அதில் கான்ஃபிரன்ஸ் ஹாலில் அமர்ந்துள்ள வேல்முருகன் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கிறார். ஷிவானி கன்னத்திற்கு கையால் முட்டுகொடுத்தப்படி கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்று உள்ளார்.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள விஜய் டிவி, லஞ்ச் பீரியடுக்கு பிறகான கிளாஸை போன்று உள்ளது என கேப்ஷன் கொடுத்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியை மரணமாய் கலாய்த்துள்ளனர்.

இதுல என்ன பெருமை?
அதாவது மேய்க்கிறது எருமை.. இதுல என்ன பெருமைன்னு யாராச்சும் கேட்ற போறாங்க.. ஒழுங்கா டாஸ்க கொடுங்கடா.. மத்த மொழிகள்ல எவ்ளோ நல்ல டாஸ்க் கொடுக்குறாங்க.. இங்க என்னடான்னா.. ஸ்டோரி டெல்லிங்.. ஃபேன்ஸி டிரெஸ் காம்பிடேஷன்னு டிராமா போட்டுக்கிட்டு இருக்கிங்க என விளாசியுள்ளனர்.

நாங்க சிரிச்சாதானடா
விஜய் டிவியின் இந்த மீமை பார்த்த இவர், நாங்க சிரிச்சாதானடா இதுக்கு மேல காமெடி பண்ணுவ என கேட்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் நடிகர் ஆனந்த்ராஜின் போட்டோவை ஷேர் செய்து பங்கம் செய்துள்ளனர்.

எங்களுக்கு என்ன மரியாதை?
விஜய் டிவியின் இந்த மீம்பை பார்த்து இந்த நெட்டிசன், நீங்களே உங்கள கலாய்ச்சிக்கிட்டா அப்புறம் எங்களுக்கு என்ன மரியாதை என எம் டன் மகன் படத்தில் நாசர் தனது மாமியாரிடம் போனில் பேசும் போட்டோவை போட்டு மிரள விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











