மொத்த முதுகையும் காட்டி.. மாலத்தீவில் மாடர்ன் உடையில் வலம் வரும் டிடி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல தொகுப்பாளினியான டிடி மாலத்தீவில் மாடர்ன் உடையில் ஒய்யார நடை போடும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரது கலகலப்பான பேச்சுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் டிடி, முழு நேர பணியாக தொகுப்பாளர் பணியை மட்டுமே கொண்டுள்ளார்.

சினிமா சின்னத்திரை
டிடி கடந்த 2014ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமா சின்னத்திரை என தொடர்ந்து வந்தார் டிடி. ஆனால் அதற்கு கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொழிலதிபருடன் காதல்?
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில் டிடி கேரளாவை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

பிறந்தநாள் பார்ட்டி
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது. அண்மையில் நடைபெற்ற டிடியின் பிறந்த நாள் விழா பார்ட்டியில் கூட டிடியின் இரண்டாவது காதலர் பங்கேற்றதாக தகவல் வெளியானது.

மாலத்தீவில் ஜாலி
இந்நிலையில் டிடி மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மாலத்தீவில் எடுத்த போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

மொத்த முதுகையும் காட்டி
அந்த வகையில் பிகினியில் டிடி குளித்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் டிடி மாடர்ன் உடையில் வலம் வரும் வீடியோ வைரலொகி வருகிறது. மொத்த முதுகும் தெரியும்படியான வெள்ளை நிற கவுனில் கண்களில் கூலர்ஸுடன் ஒய்யார நடைபோட்டுள்ளார் டிடி.

ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்
இதேபோல் மஞ்சள் நிற உடையில் சன் செட்டை தனது போட் ஹவுஸில் இருந்து கண்டு களிக்கிறார் டிடி. டிடியின் இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், செம அழகாக இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
உருகி போகிறோம்
பலரும் வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போன்று அத்தனை அழகு என்று வாயை பிளந்துள்ளனர். இந்த வீடியோவுக்கும் அதற்கு ஆப்ட்டான ஆடியோவுக்கும் செமயாய் சிங்க்காகிறது என்றும் உங்களை இப்படி பார்ப்பதில் உருகி போகிறோம் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











