பொள்ளாச்சி விவகாரம்: தேம்பித் தேம்பி அழுது வீடியோ வெளியிட்ட நடிகை

By Siva

சென்னை: பொள்ளாச்சி பெண் கதறிய வீடியோவை பார்த்து தேம்பித் தேம்பி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை நிலானி.

பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கொடுமை குறித்து தொலைக்காட்சி நடிகை நிலானி ஃபேஸ்புக் லைவில் பேசியுள்ளார்.

Netizens not ready to trust Nilani in Pollachi issue

அந்த வீடியோவில் அவர் அழுது கொண்டே பேசியுள்ளார். பொள்ளாச்சி பெண் கதறி அழுது கெஞ்சிய வீடியோவை நிலானியும் பார்த்துள்ளார். அந்த வீடியோவை பார்த்ததில் இருந்து தூங்கவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.

என் விஷயத்தில் ஓவராக பேசினீங்களே, இந்த பொள்ளாச்சி விவகாரத்தில் பேச முடியுமா? என்று கோபமாக கேட்டுள்ளார். ஒரு உயிர் போனதால் எனக்கு வேறு மாதிரி பெயர் சொல்லி பட்டம் கட்டினீர்கள். நான் அதை எல்லாம் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

நிலானியின் வீடியோவை பார்த்தவர்கள் அவர் நடிப்பதாக கமெண்ட் அடித்துள்ளனர். நிலானி மீது கொண்ட காதலை மறக்க முடியாமல் இறப்பதாகக் கூறி உதவி இயக்குநர் காந்தி தற்கொலை செய்தார். அதை பற்றியும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். எல்லாம் சரி, ஆனால் அவர் பேசிய சில விஷயங்கள் கேட்கவே கேவலமாக உள்ளது என்று பலரும் அவரை திட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X