twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு சமூகமே நாடக காதல் பண்றாங்கனு சொல்றது நியாயமாவா இருக்கு.. கொந்தளிக்கும் வலை தளவாசிகள்!

    |

    சென்னை: திரௌபதி படத்தில் ஒரு சமூகத்தினரை மட்டும் குறை சொல்லியிருப்பதில் நியாயமே இல்லை என கொந்தளித்து இருக்கின்றனர் வலைதளவாசிககள்.

    Recommended Video

    திரௌபதி சாதி படமா? | RENIGUNDA NISHANTH INTERVIEW | V-CONNECT |FILMIBEAT TAMIL

    பெரும் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் பிறகு வெளியாகியிருக்கும் படம் திரௌபதி. தமிழகம் முழுக்க இன்று 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது.

    படம் ரிலீஸான தியேட்டர்களில் தாரை தப்பட்டை மிரட்ட, சிலம்பாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் என கிராம நடனங்களை வைத்து அசத்தியிருக்கின்றனர் படக்குழுவினர்.

    லோக்கல் வசனங்கள்

    லோக்கல் வசனங்கள்

    படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். நாடக்காதல் என்ற ஒரு கான்செப்ட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். படத்தில் வழக்கத்தில் உள்ள குற்றச்சாட்டுக்கள் லோக்கல் வசனங்களாக தெறிக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    சில கேரக்டர்கள்

    சில கேரக்டர்கள்

    குறிப்பாக ஜீன்ஸ் பேன்ட், கூலிங்கிளாஸ் மற்றும் அடக்குனா அடங்கக்கூடாதுன்னு அண்ணன் சொல்லியிருக்காரு என்ற வசனங்களும் பட்டையை கிளப்புகிறது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். படத்தில் இடம்பெற்றிருக்கும் சில கேரக்டர்கள் அப்படியே சில அரசியல் கட்சி தலைவர்களை ஒத்து போவதாகவும் கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

    நியாயமே இல்லை

    நியாயமே இல்லை

    இந்நிலையில் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டுமே குற்றம்சாட்டியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சமூகத்தினரை மட்டும் நாடகக்காதல் செய்வதாக குற்றம்சாட்டியிருப்பதில் கொஞ்சமும் நியாயம் இல்லை என்றும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

    ஒரு சமூகத்தையே..

    பரியேறும் பெருமாள், அசுரன் படங்கள அந்த மேல் சமூகத்தில் ஒரு சிலரையே குறிப்பிட்டு சொன்னாங்க ஒட்டுமொத்த சமூகத்தை இல்லை. ஆனா நீங்க ஒரு சமூகமே நாடக காதல் பண்றாங்கன்னு சொல்றது நியாயமாவா இருக்கு என திரௌபதி படம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

    அவமதிப்பது..

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு !! என இயக்குநர் பா ரஞ்சித்தை சாடியிருக்கிறார் இவர். இயக்குநர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான படம்தான் பரியேறும் பெருமாள். இந்த படத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை, மேல் தட்டு சமுதாயத்தை சேர்ந்த சிலர் அவமதிப்பதும் கொல்லத்துடிப்பதுமாய் காட்சியப்படுத்தப்பட்டிருக்கும்.

    களைக்கட்டிய தியேட்டர்ஸ்

    திரௌபதி படம் அனிமேஷன் படமாம் யாரு சொன்னாங்க ....போராளி சொன்னாங்க.. என படத்தை விமர்சிப்பவர்களை கிண்டலடித்திருக்கிறார் இவர். மற்றொரு நெட்டிசனான இவர், திரௌபதியின் ஆட்டம் ஆரம்பம்..! களைகட்டிய திரையரங்குகள்...! என தியேட்டர்களில் திரௌபதி படம் கொண்டாடப்படுவிதை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

    நிஜமானது இன்று

    சார் கொஞ்சம் பொறுங்க சார் திரௌபதி வந்துட்டு இருக்கா என டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன். திரெளபதி பட்டையை கிளப்புகிறாள் எங்கள் அழகுசமுத்திரம் அம்மன் திரையரங்கில் என அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார் இவர். மதம் மனிதனை மிருகமாக்கும் ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்
    நிஜமானது இன்று.. என திரௌபதி படத்தை குறிப்பிட்டு கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Netizens opposing for Draupathi movie. Draupathi talks about drama love of some particuler cast.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X