கிஸ்வால் அருகே விக்கி நயன் கொடுத்த போஸ்.. இதே வேலையா போச்சு.. கடுப்பில் கேள்வி கேட்கும் நெட்டிசன்ஸ்!

பார்சிலோனா: விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவுகின்றது.

இவர்களது லேட்டஸ்ட் அப்டேட்டை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவுகின்றது. அதுமட்டுமில்லாமல் வேற லெவெலில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றது.

கவர்ச்சியாக இருக்கும் ஜோடி

கவர்ச்சியாக இருக்கும் ஜோடி

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் சென்று உள்ளனர். அங்கே எடுக்கப்படும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவர்கள் இருவரும் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே காட்டு தீப்போல பரவுகின்றது. சமீப காலமாக படங்களில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வரும் நடிகை நயன்தாரா தனது ஹனிமூன் புகைப்படங்களில் படு கவர்ச்சியாகவே போஸ் கொடுக்கிறார்.

இரண்டாவது ஹனிமூன்

இரண்டாவது ஹனிமூன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஸ்பெய்னுக்கு சென்றுள்ளதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் இரண்டாவது ஹனிமூனா என்று நக்கலாக கமெண்ட் செய்து வருவதுடன், தனது கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் நிரப்பி வருகின்றனர். அங்கே இருக்கக்கூடிய தெருக்களிலும், ஹோட்டல்களிலும் விதவிதமாக போஸ் கொடுக்கும் நயன்தாராவின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

கிஸ்வால் அருகே கிஸ்

கிஸ்வால் அருகே கிஸ்

ஸ்பெயினில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த கட்டிடங்கள் அருகிலும், அழகிய சாலைகளிலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடனம் ஆடிய வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த சுதந்திர தினத்தையும் அங்கேயே கொண்டாடிய இவர்கள் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தனர். இதை தொடர்ந்து, சமீபத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது. கிஸ்வால் என்று அழைக்கக்கூடிய ஒரு சுவரின் அருகில் நின்று இருவரும் முத்தம் கொடுப்பது போல போஸ் கொடுக்கின்றனர். அந்த பெரிய சுவர் முத்தம் கொடுப்பது போல டைல்ஸ்களால் செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பேச்சுப் பொருளாகவும் மாறியுள்ளது.

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்

கிஸ்வால் அருகே இருக்கும் இவர்களது புகைப்படம் பார்த்த நெட்டிசன்களும், திருமணம் முடிந்ததிலிருந்து இப்படியே ஹனிமூன் சென்று கொண்டிருந்தால் எப்படி ஷாருக்கானின் ஜவான் மற்றும் ஜெயம் ரவியின் படத்தில் நயன்தாரா போர்ஷன் முடிந்து விட்டதா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் நடித்த படத்தின் அப்டேட்டுகளையும் கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளனர். தற்போது அஜித்குமாரின் ஏகே 61 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பது நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஏகே 62 படத்தின் ஆரம்ப பணிகள் எப்போது தூங்குவீர்கள் என்று அஜித் ரசிகர்களும் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர். எப்பொழுது டூரை முடித்துவிட்டு நாடு திரும்புவார்கள் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X