என்ன நெல்சன்.. சன் பிக்சர்ஸ் ஆபிஸ்லயே தூங்கிட்டீங்களா? லேட்டான பீஸ்ட் அப்டேட்.. கலாய்த்த ரசிகர்கள்!
சென்னை: விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் டிரைலர் அப்டேட்டுக்காக காத்திருந்த நிலையில், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் நெல்சன் விஜய் ரசிகர்களை சற்றே பாடாய் படுத்தி விட்டனர்.
6 மணிக்கு டைமிங்கில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் பற்றிய ட்வீட் போட விஜய் ரசிகர்கள் கிச்சான்னாலே இழிச்சவாயன் தான் என மீம் போட்டு வெறுப்பை கொட்டித் தீர்த்தனர்.
இந்நிலையில், ஒரு வழியாக 6.30 மணியளவில் பீஸ்ட் டிரைலர் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் வெளியிட அதனை தொடர்ந்து நெல்சனும் ட்வீட் போட சன் பிக்சர்ஸ் ஆபிஸ்லயே தூங்கிட்டீங்களா தலைவா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பீஸ்ட் டிரைலர் தேதி
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 13 என தெரிந்தும் ரசிகர்கள் டிரைலர் அல்லது டீசர் எப்போது வரும் அதன் தேதி என்ன என்று கடந்த ஒரு வார காலமாக அதுவும் கேஜிஎஃப் 2 டிரைலர் வந்த பிறகு ரொம்பவே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், பீஸ்ட் டிரைலர் வரும் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு வரும் என சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1 வேண்டாம்
ஏப்ரல் 1ம் தேதி பீஸ்ட் டிரைலர் வெளியாகும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் ஃபூல் ஆக்கி விடுவார்கள் என அன்றைய தினத்தில் வேண்டாம் என முடிவு செய்து ஏப்ரல் 2ம் தேதி சனிக்கிழமை பீஸ்ட் படத்தின் டிரைலரை வெளியிட முடிவு செய்துள்ளனர். வீக்கெண்ட் என்பதால் விஜய் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக ஆன்லைனில் மிகப்பெரிய ரெக்கார்டை படைக்க வசதியாக இருக்கும் என தெரிகிறது.

டிரெண்டான நெல்சன்
#NelsonDilipkumar ஹாஷ்டேக்கை போட்டு ஏன் இந்த அளவு தாமதம் என ஆறு மணியில் இருந்து விஜய் ரசிகர்கள் விளாசி தள்ளி விட்டனர். அதற்கு ஏற்றார்போல சரியாக கமலின் விக்ரம் பட அப்டேட், போனி கபூர் ட்வீட் என ஏகப்பட்ட அப்டேட்கள் 6 மணிக்கு வந்து விஜய் ரசிகர்களை ரொம்பவே அப்செட் செய்து விட்டன.

காத்திருந்து காத்திருந்து
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என மிஸ்டர் பீன் மீம் டெம்ப்ளேட்டை போட்டு நாளைன்னு சொன்னீங்களே நெல்சன் எந்த நாளைன்னு சொல்லலயே என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து மீம்களை போட்டுத் தாக்கி அந்த ஹாஷ்டேக்கை பெரியளவில் டிரெண்ட் செய்தனர்.

அட்வான்ஸ் ஏப்ரல் ஃபூல்
விஜய்யின் பீஸ்ட் படத்தின் அப்டேட்டையே கொடுக்காமல் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களுக்கும் இயக்குநர் நெல்சன் அட்வான்ஸ் ஏப்ரல் ஃபூல் சொல்ல போகிறார் என நெட்டிசன்கள் நெல்சன் போட்டோக்களை போட்டே விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் வெகுவாக வம்பிழுத்து வந்தனர்.

சன் பிக்சர்ஸ் ஆபிஸ்லயே தூங்கிட்டீங்களா
பாடல் புரமோஷனுக்கு செம ஃபன்னாக அனிருத் ஸ்டூடியோவிலேயே தூங்குவதை போல இயக்குநர் நெல்சன் காமெடி பண்ணியிருந்த நிலையில் அதே போல சன் பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே பீஸ்ட் அப்டேட் கேட்டு படுத்து தூங்கிட்டீங்களா நெல்சன் அண்ணா என விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

6.30க்கு
6ல வச்சேன் நினைச்சியா தாஸ்.. 6.30ல வச்சேன் என இயக்குநர் நெல்சன் மற்றும் சன் பிக்சர்ஸ் சொல்வது போல அயன் படத்தில் வில்லன் பேசும் அந்த வசன மீமை போட்டு பங்கம் பண்ணி வருகின்றனர். ஏப்ரல் 2ம் தேதி மட்டும் 6.01ஐ தாண்டட்டும் அப்புறம் இருக்குது கச்சேரி என விஜய் ரசிகர்கள் பல்லை கடித்துக் கொண்டு ரெக்கார்டு பிரேக் பண்ண ரெடியாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











