Thug Life:நல்லவேளை தப்பிச்சீங்க.. ரவி மோகன், துல்கர் சல்மானை பாராட்டும் ஃபேன்ஸ்.. ரொம்ப தெளிவு தான்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் நேற்று தியேட்டரில் வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் முதல் நாளிலேயே நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று வருகிறது. அனைவரின் நடிப்பும் சூப்பர் ஆனால், கதையே இல்லை என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், சில இணையவாசிகள் துல்கர் சல்மான் மற்றும் ரவி மோகன் நல்லவேளை தப்பித்துவிட்டார்கள் என கருத்துக்களை பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
நாயகன் என்ற பிளாக் பஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 37 வருடத்திற்கு பின் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்தனர். இந்த படத்தில், த்ரிஷா, அபிராமி, சிம்பு, நாசர், அசோக் செல்வன் என பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள், படத்தில் கதையே இல்லை, பழி வாங்குவது தான் கதை, இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படி பழிவாங்குவதையே படமாக எடுத்துக்கொண்டு இருப்பார்கள். த்ரிஷா ஏன் இப்படி ஒரு ரோலில் நடித்தார் என்று தெரியவில்லை. சிம்பு நன்றாக நடித்து இருக்கிறார். ஆனால் கதையே இல்லை, படத்தின் இரண்டாவது பாதியை, மணிரத்னம் இயக்கியது போலவே தெரியவில்லை படம் செம மொக்கை என படம் பார்த்தவர்கள் தங்களின் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

நெட்டிசன்ஸ் ட்ரோல்: மற்றொரு பக்கம் படம் பார்த்த இணையவாசிகள், நல்ல வேளையாக இந்த படத்தில் இருந்து ரவி மோகன், துல்கர் சல்மான் விலகி விட்டார்கள் அதற்காக அவர்களை பாராட்டியாக வேண்டும் என இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தக் லைஃப் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான போது, துல்கர் சல்மான் மற்றும் ரவி மோகன் இந்த படத்தில் கமிட்டாகி இருந்தனர். ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பாகவே, கால் ஷுட் பிரச்சனை காரணமாக இருவரும் படத்தில் இருந்து வெளியேறினர். துல்கர் சல்மான் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார், ரவி மோகன் தனது லட்சிய படமான ஜீனியில் நடித்துக்கொண்டு இருந்ததால் விலகினர்.
நல்லவேளை நடிக்கல: தக் லைஃப் படத்தில் இருந்து ரவி மோகன், துல்கர் சல்மான் இருவரும் விலகியதை பாராட்டி உள்ள இணைவாசி ஒருவர் தனது எக்ஸ் தளபக்கத்தில், "#ThugLifeReview : Dq மற்றும் ரவி மோகன் தப்பித்துவிட்டார்கள். இந்த படத்தை நடிக்கவில்லையே என கவலைப்பட வேண்டாம் என பதிவிட்டுள்ளார். அதே போல, மற்றொரு ரசிகர் "ரவி மோகன் மற்றொரு திகில் படத்திலிருந்து தப்பினார்" என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ரவி மோகன் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில், இந்த படத்திலும் நடித்து இருந்தால், மொத்தமும் போய் இருக்கும் நல்லவேளை அவர் தப்பிட்டுவிட்டார் என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தக் லைஃப் படத்தை, கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சன்யா மல்ஹோத்ரா, ஜோஜு ஜார்ஜ், நாசர், அலி ஃபசல், பங்கஜ் திரிபாதி, ரோஹித் சரஃப், பாபுராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர்


Click it and Unblock the Notifications











