Mathagam: லோகேஷ் கனகராஜ்கே டஃப் கொடுப்பாரு போல.. சம்பவம் செய்த திரைக்கதை.. மாஸ் காட்டிய மத்தகம்!

சென்னை: இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் தான் மத்தகம். இரண்டு பாகமாக வெளியாக உள்ள இந்த தொடரின் முதல் பாகம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது

இதில், அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி, வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு என பலர் நடித்துள்ளனர்.

Netizens praises director Prasath Murugesan for Mathagam web series

குட் நைட் படத்தில் மோட்டர் மோகனாக நடித்து அசத்திய மணிகண்டன், மத்தகம் தொடரில் படுபயங்கரமான வில்லனாக நடித்துள்ளார்.

மத்தகம் வெப் தொடர்: இந்த தொடருக்கு மத்தகம் என ஒரு யுனிக்கான பெயரை தலைப்பாக வைத்து இருக்கிறார் இயக்குநர். மத்தகம் என்பதன் யானையின் நெற்றி என்று அர்த்தமாம். இப்படி ஒரு வித்தியாசமான பெயரை வைத்ததற்கே இயக்குநரை பாராட்டலாம். டைட்டிலுக்கு ஏற்றால் போல கதையும் அழுத்தமானதாகவே உள்ளது.

கதையின் ஒன் லைன்: இரவு ரோந்து பணிக்காக அதர்வா சுற்றிக் கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் விபத்துக்கு உள்ளாகிறது. அதில் பிரபல ரவுடியின் பிறந்த நாளுக்காக மொத்த ரவுடி கூட்டமும் பங்கு பெற இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதாவது படாளம் சேகர் என்ற தாதாவின் பிறந்த நாள் தான் அது. ஏற்கனவே போலீசாரால் இறந்து விட்டதாக கருதப்படும் இந்த தாதா வெளி உலகத்திற்கு தெரியாமல் பல வேலைகளை செய்கிறார்.

நல்ல நடிப்பு: தனது பிறந்த நாள் அன்று ஒட்டுமொத்த ரவுடிகளையும் ஒரே இடத்திற்கு கூட்டுகிறார். இதன் மூலம் மிகப்பெரிய அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை அதர்வா உணருகிறார். இதைத்தொடர்ந்து அந்த ரவுடிகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மத்தகம் வெப் தொடரின் கதை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது வித்தியாசத்தை காட்டி மேலும் மெருகேற்றி வருகிறார் மணிகண்டன்.

லோகேஷ் கனகராஜின் சிஷ்யனா: வழக்கமாக ரௌடிசம், கேங் ஸ்டார் படங்கள் என்றாலே அது ரசிகர்களை கவர்ந்து விடும் அதற்கு சாட்சியாக கைதி,விக்ரம் என பல படங்கள் உள்ளன. கைதி படத்தில் திரும்பிய பக்கம் எல்லாம் ரௌடிகளை ஹீரோ போல காட்டி, நம்மை ரௌடிப் பிரியர்களாக்கிய லோகேஷ் கனகராஜின் சிஷ்யனா இருப்பாரு போல மத்தகம் இயக்குநர். ஒரே இரவுக்குள் புது புது ரௌடிகளை களமிறக்கி மிரட்டி விட்டார்.

Netizens praises director Prasath Murugesan for Mathagam web series

தலைவரும் திமிங்கலம்: பட்டாளம் சேகர், சங்கு கணேஷ், காயின் மணி, சூளை பாபு, மொட்டை மணி, திமிங்கலம் என பெயரை வைத்து அந்த கேரக்டருக்கு தகுந்த நடிகரை தேடி எடுத்து நடிக்க வைத்து இருக்கிறார் டைரக்டர். அதே போல ஒவ்வொரு ரௌடிக்கும் தனித்தனி கதை கொடுத்தவிதமும், பின்னணியில் வரும் கதையும் குரலும் சூப்பர். இருந்தாலும், அரவிந்த்சாமி, வெற்றிமாறன், சமுத்திரக்கனி மாதிரியான ஆட்களை குரல் கொடுக்க வைத்திருந்தால், இன்னும் ரீச் கிடைத்து இருக்கும்.

ஐந்து எபிசோடுகள்: எத்தனையோ க்ரைம் வெப் சீரிஸ் பார்த்து இருந்தாலும், இந்த தொடர் சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ரௌடிகளின் தனித்தனியான கதை தான் என்று நெட்டிசன்கள் மத்தகம் இயக்குநரை பாராட்டி வருகின்றனர். ஐந்து எபிசோடுகளுமே அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை தூண்டி உள்ளது. க்ரைம், திரில்லர் ஜானரில் ஈடுபாடு உள்ளவர்கள் இந்த தொடரை ஆமேசானில் சென்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X