இந்த வாரம் கேபி ஆட்டம் போல.. பாலாஜியை வச்சு செய்யுது.. எகிறும் கிரேஸ்.. குஷியில் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் கேபியை பாராட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் பாடல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதில் பாலாஜிக்கும் கேபிக்கும் யார் முதலில் தொட்டது என்ற வாக்குவாதம் நடக்கிறது.
ஆனால் அதை சட்டை பண்ணாத கேபி, நான் பாடலை பாட போகிறேன் என்று கூறி ஹார்ட்டுக்குள்ள பச்சைக்குத்தியே பாடலை பாடிவிட்டு செல்கிறார். இதனால கடுப்பான பாலாஜி சொல்லிட்டு பாடணும் என கேபியிடம் எகிறுகிறார்.

இது டாஸ்க்கா?
இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு பதிலடி கொடுக்க சரியான ஆள் கேபிதான் என்றும் இந்த வாரம் கேபியின் ஆட்டம்தான் போல என்றும் பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் இதுக்கு பெயர் டாஸ்க்கா என்று கேட்டும் விளாசி வருகின்றனர்.

மக்களே ஐடியா கொடுப்பாங்க
கிரியேட்டிவ் டீம்க்கு ஐடியா இல்லனா கிரியேட்டிவ் டாஸ்க் ஐடியாஸ்னு காம்பிடிஷன் வையுங்க.. மக்கள் சூப்பர் டாஸ்க் சொல்லுவாங்க! டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் இப்படி யாரு ஃபர்ஸ்ட்னு பிடிக்ட் பண்ண முடியாத டாஸ்க். மூன்றாவது அம்பையரும் டைம்க்கு வரமாட்டாரு! என விளாசியுள்ளார்.

தகுதி இல்லை
கேபியுடன் பாலாஜி வாக்குவாதம் செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாஸ்! காட்டுமிராண்டு பாலாஜியை வெளியே அனுப்புங்க.. பாலாஜிக்கு உள்ளே இருக்க தகுதி இல்லை என்று சாடியிருக்கிறார்.

என்ன ட்ரை பண்றீங்க?
முதல் சீசன்ல ஃபினாலே வாரத்துல் ஃபைனலிஸ்ட் தானே இருந்தாங்க இந்த முறை 6 பேர் இருக்கவைக்க போறாங்க & டிக்கெட் டூ பினாலேவில் வின் பண்றவங்க ஃபைனலிஸ்ட் ஆவாங்க. ஆனா இந்த முறை ஃபினாலே வாரத்துக்கு தான் போவாங்களாம். விஜய் டிவி என்ன ட்ரை பண்றான்னு தெரியலையே என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

திருத்த முடியாது
இன்றைய முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சீட்டிங் கில்லாடி பாலாஜி!... அவன் திருந்தவும் மாட்டான்!,, யாரும் அவனை திருத்தவும் முடியாது! என்று கூறியுள்ளார்.

கேபி ஆட்டம் போல
முதல் புரமோவில் கேபி செய்த வேலையை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரம் கேபி ஆட்டம் போல.. என பிதிவிட்டுள்ளார்.

ஆரி விட்டுக்கொடுப்பார்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கேபி டைட்டில் வின் பண்ணுனா நல்லா இருக்கும். ஆரி அடுத்து அவரே விட்டு கொடுத்துட்டு போயிடுவாரு கவின் மாதிரி என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











