அத்தை சொத்தையாக உட்காந்து இருந்த மொமெண்ட்.. காது குத்து விழாவில் அனிதா சம்பத் ஆதங்கம்!
சென்னை: அனிதா சம்பத் காது குத்து விழாவில் ஆதங்கப்பட்டு ஷேர் செய்துள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.
சன் டிவி செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் ஒரு பக்கம் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியிருந்தாலும் மறுப்பக்கம் தனது ஒரிஜினல் முகத்தையும் காட்டி பெயரை டேமேஜ் செய்துக் கொண்டார்.

போட்டோக்கள் வீடியோக்கள்
பிக்பாஸ் நிக்ழச்சியில் எப்போதும் தனது காதல் கணவர் மீதான் அன்பை வெளிப்படுத்தி வந்த அவர், சமூக வலைதளங்களிலும் தனது கணவர் குறித்து பேசி வருகிறார். அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் அனிதா சம்பத்.

அக்கா மகளுக்கு காதுக்குத்து
அந்த வகையில் அனிதா சம்பத் தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவும் அதற்கான விளக்கமும் வைரலாகி வருகிறது. அதாவது, தனது கணவர் பிரபாகரனின் அக்கா மகளின் காது குத்து விழாவில் பங்கேற்றுள்ளார் அனிதா சம்பத்.

அத்தை சொத்தையாக..
இதில் காதுகுத்து நிகழ்ச்சி என்று வந்தாலே தாய் மாமன் தாய் மாமன் என தாங்குவதாகவும் அத்தை சொத்தையாக உட்காந்திருக்க வேண்டியதுதான் என தனது கணவரையும் தன்னையும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத்.

வெண்பாவின் முதல் மொட்டை
இதுதொடர்பான தனது பதிவில் மொட்டை ஃபங்ஷன்னு வந்துட்டாலே இந்த "தாய் மாமன" மட்டும் தான் தாங்கு தாங்குனு தாங்குறாங்க பா.. அத்தை சொத்தையாக உக்காந்து இருந்த மொமண்ட்..! பிரபாவின் அக்கா பொண்ணு வெண்பாவின் முதல் மொட்டை சோழிங்கரில் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதங்கம் புரிகிறது
மேலும் யூட்யூப் வெர்ஷன் என்று குழந்தையுடன் அனிதா பதிவிட்ட புகைப்படம்..அதிர்ச்சியில் ரசிகர்கள்! மொமென்ட் என்றும் பதிவிட்டுள்ளர். அனிதா சம்பத்தின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் ஆதங்கம் புரிகிறது என காமெடியாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

கேப்ஷன் மாஸ்
இன்னும் சிலர், உங்களின் கேப்ஷன் அருமையாக உள்ளது என்றும் வர வர உங்களின் கேப்ஷனுக்கு நாங்கள் ரசிகர்களாகிவிட்டோம் என்றும் தெரிவித்து வருகின்றனர். மேலும் யூட்யூப் வெர்ஷன் என அவர் போட்டிருக்கும் கேப்ஷன் மாஸ் என்றும் புகழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











