தனுஷ் நடிப்பை யாருமே டச் பண்ணல.. அசுரன் ரீமேக் நரப்பாவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்!
சென்னை அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நரப்பா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தனுஷ் அளவுக்கு வெங்கடேஷ் நடிக்கவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் அசுரன். இந்தப் படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் லீடிங் ரோலில் நடித்தனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது இப்படம்.

தேசிய விருது
மேலும் அசுரன் திரைப்படத்திற்கு சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதும் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.

அசுரன் ரீமேக்
இதனை தொடர்ந்து அசுரன் படம் தெலுங்கில் நரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கிய இப்படத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் தனுஷ் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

கலவையான விமர்சனம்
பிரியா மணி மஞ்சுவாரியர் கதாப்பாத்திரத்தில் நடித்தார். தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த இப்படம் ஓடிடி தளத்தில் நேற்று ரிலீஸ் ஆனது. நரப்பா படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்
வெங்கடேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றும் வெங்கடேஷ் தனுஷ் போல் நடிக்க ரொம்பவே கஷ்டப்பபட்டிருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தனுஷ் அளவுக்கு வெங்கடேஷ் நடிக்கவில்லை என்றும் அவரது நடிப்பை யாராலும் தொட முடியவில்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் தொட்டு விட்டார்
நரப்பர படத்தை பார்த்த இந்த ரசிகர், நடிகர் வெங்கடேஷ் சமீப காலமாக நடித்த படங்களில் பொம்மை போன்றே வந்து செல்கிறார். வெங்கடேஷ் நடித்த நடிப்பின் தூரத்தை தனுஷ் எப்போதோ தொட்டுவிட்டார். தற்போது தனுஷ் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் இயக்குநரின் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் வெங்கடேஷ் இன்னமும் அவரை விட சிறியவர்களின் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

மேட்ச் செய்ய முடியவில்லை
மற்றொரு ரசிகரான இவர் அசுரன் படத்தில் தனுஷ் சிறப்பாக நடித்திருந்தார். தனுஷின் நடிப்பு லெவலை யாராலும் மேட்ச் செய்ய முடியவில்லை. நரப்பா ரீமேக் படம் ஒரினல் படத்தை போன்ற ஃபீலை கொடுக்கவில்லை என தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











