அந்த பேரு பொருத்தமானதுதான்.. முதல் படத்திலேயே பட்டையை கிளப்பிய துருவ் விக்ரம்.. திணறும் டிவிட்டர்!
Recommended Video
சென்னை: துருவ் விக்ரமின் ஆதித்யவர்மா படம் இன்று ரிலீஸாகியுள்ள நிலையில் துருவ் விக்ரமின் நடிப்பை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி மற்றும் அதன் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படங்களின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படம் ஆதித்யவர்மா.
இந்தப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். பானிடா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

டிவிட்டர் ட்ரென்டிங்
இந்தப் படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை முன்னிட்டு #AdithyaVarmaFromToday, #DhruvVikram உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகின்றன. படத்தை பார்த்த நெட்டிசன்கள், முதல் படத்திலேயே துருவ் விக்ரம் பட்டையை கிளப்பியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
THALAPATHY & CHIYAAN ❣
Chiyaan son is very dedicated work to this film of Adithya Varma 👏👌
Best Wishes Bottom of Heart from THALAIVAR #Thalapathy fanz 💐❣
Have a greatest success in your life & career #DhruvVikram 🤩🤩🤩#AdithyaVarma pic.twitter.com/g0JwsKkAFL — ☆தமிழன் சுந்தர்000☆ (@Singh0078012501) November 22, 2019 '>
அர்ப்பணிப்புடன்
தமிழ் சினிமாவின் நல்ல நண்பர்கள் தளபதி மற்றம் சியான். சியானின் மகன் ரொம்பவும் அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். தளபதி ரசிகர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள். துருவ் விக்ரம் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை பெற வேண்டும் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
எதிர்பார்ப்பு
முதல் நாளிலேயே தமிழகத்தில் 2.25 கோடி ரூபாய் முதல் 2.75 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெறிக்க விடுகிறார்
அறிமுக படத்திலேயே செம பர்ஃபாமன்ஸ்.. துருவ் விக்ரம் சும்மா தெறிக்கவிடுகிறார் என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.
சிறந்த அறிமுகம்
ஆதித்யவர்மாவுக்கு பாஸிட்டிவான விமர்சனங்கள்தான் கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் துருவ் விக்ரம்.. சிறந்த அறிமுகம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
அடுத்த தலைமுறை
ஹேட்ஸ் ஆஃப் விக்ரம் சார்.. வர்மாவுக்கு பிறகு துருவுக்கு மேலும் ஒரு நம்பிக்கையை கொடுங்கள், உங்கள் மகனின் வாழ்க்கையை கவனமாக கவனித்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அடுத்த தலைமுறை பெற்றோருக்கு இன்ஸ்பையரேஷனாக இருக்கும்.. ஆதித்யவர்மாவுக்கு பாஸிட்டிவான விமர்சனங்கள் வருகிறது.. மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
பொருத்தமான பெயர்
துருவ் விக்ரமுக்கு இளவரசர் பெயர் மிகவும் பொருத்தமாக உள்ளது. கோலிவுட்டுக்கு அவரை மனமார வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம். ஆதித்வர்மா மிகப்பெரிய வெற்றியைப் பெறவும் வாழ்த்துகிறோம் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











