பாட்டு இல்ல.. ஹீரோயின் இல்ல.. ஆனா ஒரு நிமிஷம் கூட கண்ண ஸ்க்ரீனவிட்டு நகர்த்த முடியல! கைதி வேறலெவல்!

சென்னை: கைதி படம் ரிலீஸாகி மூன்று நாட்கள் ஆகியும் மக்களின் வரவேற்பு அதிகரித்தப்படியே உள்ளது.

கார்த்தி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கைதி. இந்த படம் பிகிலுக்கு போட்டியாக கடந்த வெள்ளிக் கிழமை ரிலீஸானது.

ஒரே இரவில் நடக்கும் காட்சியாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹீரோயின் இல்லை.

அட்டகாசம்

அட்டகாசம்

கைதி படம், 130 கோடி ரூபாய் செலவில் விஜய், அட்லீ, ஏஆர் ரஹ்மான், நயன்தாரா என மெகா கூட்டணியில் உருவான பிகில் படத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டது. அந்தளவுக்கு கைதியை அட்டகாசமாக கையாண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஹவுஸ்ஃபுல்

ஹவுஸ்ஃபுல்

படம் ரிலீஸாகி மூன்று நாட்கள் ஆனபோதும் படத்தின் வரவேற்பு கொஞ்சமும் குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் கைதி படத்தின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகி வருகின்றன.

நெட்டிசன்ஸ்

நெட்டிசன்ஸ்

படத்தை பார்க்கும் ரசிகர்கள், தியேட்டரில் இருந்து வெளியே வந்த கையோடு படம் குறித்த ரிவ்யூவைதான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் கைதி படம் குறித்து நெட்டிசன்கள் தெரிவிக்கும் கருத்துக்களில் சில..

நகர்த்த முடியல

பாட்டு இல்ல, ஹீரோயின் இல்ல, ஆனா ஒரு நிமிஷம் கூட கண்ண ஸ்க்ரீன விட்டு நகர்த்த முடியலை. ஒவ்வொரு துறையும் அவங்களோட பெஸ்ட்ட கொடுத்திருக்காங்க.. குறிப்பா சண்டைக்காட்சி, இசை மற்றும் ஒலி வடிவமைப்பு.. என பாராட்டுகிறார் இந்த ரசிகர்.

உண்மையான வெறித்தனம்

இது தான் உண்மையான வெறித்தனம் என்று கூறுகிறார் இவர்.

என்ன ஒரு அனுபவம்

இப்போதான் கைதி பார்த்தேன்.. என்ன ஒரு அனுபவம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தண்ணி வர வச்சுட்டீங்க

அந்த க்ளைமேக்ஸ் சீன்ல கண்ணுல தண்ணி வர வச்சுட்டீங்க என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X