அஸ்யூஷ்வல் வார்த்தை விளையாட்டு.. தொழில் பக்தின்னா இதான்.. புரமோவை பார்த்து புகழும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் கமலை புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோவில், கமலின் பிறந்த நாளை முன்னிட்டு பிக்பாஸ் அவருக்கு வாழ்த்து கூறினார். மேலும் கமலிடம் பிறந்த நாளுக்காக ட்ரீட்டும் கேட்டார் பிக்பாஸ்.
அதற்கு கமல் கூறிய பதில் பலரையும் கவர்ந்துள்ளது. நான் எல்லோரையும் சமமாகவும் மரியாதையாகவும் ட்ரீட் பண்ணுவேன்.. அதையே எதிர்பாருங்கள் அதுதான் ட்ரீட் என கூறினார். கமலின் இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் இதான் உலக நாயகன் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

பாராட்டாம இருக்க முடியல
உங்கள புடிக்காதுன்னு சொல்லல புடிக்காம இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்.. உங்கள சில சமயம் எவ்வளவோ வெறுக்கிறனோ, அதே மாதிரி பல சமயம் நீங்க பண்றதை பாராட்டாம இருக்கவும் முடியல. நீங்க நல்லவரா கெட்டவரா.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உலகநாயகன் என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கேப்பியா கேப்பியா..
முதல் புரமோவில் கமலிடம் பிறந்தநாள் ட்ரீட் கேட்டார் பிக்பாஸ், அதற்கு கமல் அல்டிமேட் பதில் கொடுத்தார். அதனை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் மைண்ட் வாய்ஸ்... இனிமே ட்ரீட் கேப்பியா கேப்பியா என காமெடி வீடியோ ஒன்றை ஷேர் செய்து கலாய்த்துள்ளார்.

இரட்டிப்பு மகிழ்ச்சி
பிறந்தநாள் வாழத்துக்கள் அய்யா.. கிராம சபைய மீட்ட மாறி இன்னும் நிறைய செய்யணும்!! நீங்க எல்லாரையும் சமமா நடத்துவீங்க! அப்படியே உள்ள இருக்கவங்களையும் நடத்த சொன்னா இரட்டிப்பு மகிழ்ச்சி! என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தொழில் பக்தி இதான்
எவ்வளவு பேர் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாழ்த்து சொல்லுவாங்க அதையெல்லாம் பொருட்படுத்தாது அஸ்யூஷ்வல், கூலா, ஸ்டைலா அவருடைய வார்த்தை விளையாட்டில்.. தொழில் பக்தினா என்னன்னு தெரிஞ்சுக்கணும் என பாராட்டி டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

நடவடிக்கை எடுங்கள்
பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் சார்.. அப்படியே பேசவே தெரியாத வேற்றுக்கிரகவாசி ஒருத்தன் உள்ள இருக்குறான் அவன் மேல நடவடிக்கை எடுங்க. இல்லன்னா உங்கமேல இருக்குற நம்பிக்கை எங்களுக்கு இல்லாமலே போயிடும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அதை என்னன்னு கேளுங்க
தலைவா உங்க நிகழ்ச்சியில ஒருத்தன் அசிங்கமா பேசி இருக்கான்... அதை என்னனு கேளுங்க, அதுக்கப்புறம் தமிழ் பெண்கள காப்பாத்துங்க.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











