நீங்க நிறைய தமிழ் படங்கள்ல நடிக்கனும்.. சீறு பட வில்லன் நவ்தீப்புக்கு ரசிகர்கள் கோரிக்கை!
Recommended Video
சென்னை: சீறு படத்தில் நடிகர் நவ்தீப்பின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடிகர் ஜீவா, நடிகை ரியா சுமன் ஆகியோரின்ன நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி வெளியான படம் சீறு. இந்தப் படத்தை விஜய் சேதுபதியை வைத்து றெக்க என்ற படத்தை இயக்கிய ரத்ன சிவா இயக்கியிருக்கிறார்.

சீறு படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள செவ்வந்தியே மதுவந்தியே பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகியிருகிறது.
ஒரு ஹிட்டாவது கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த ஜீவாவுக்கு இந்த படம் பெரிதும் கை கொடுத்திருக்கிறது. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள நவ்தீப்புக்கும் இந்த படம் பெரும் பிரேக்காக உள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் நவ்தீப்பின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அறிந்தும் அறியாமலும் படத்தில் அப்பாவி பையனாக நடித்த நவ்தீப் இந்த படத்தில் மிரட்டியிருக்கிறார்.
அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் நவ்தீப் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
எல்லோரின் வலுவான நடிப்பாலும் சிறந்த கதையாக உள்ளது சீறு. இமானின் இசை மற்றும பிஜிஎமில் காதல் வயப்பட்டுவிட்டேன். நவ்தீப் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நீங்கள் அதிக தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











