twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓ மை கடவுளே படம் எப்டி இருக்கு.. உனக்கு சொன்னா புரியாது மச்சான்.. டிவிட்டர் விமர்சனம்! #OhMyKadavule

    |

    சென்னை: ஓ மை கடவுளே படம் குறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    அசோக் செல்வன் நடிப்பில் காதலர் தினமான இன்று வெளியாகி இருக்கும் படம் ஓ மை கடவுளே. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.

    சின்னத்திரை நடிகையான வாணி போஜன் இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளார். ஓ மை கடவுளே படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.

    வாவ்.. செம்ம.. நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல்! சூப்பர் விக்னேஷ் சிவன்!வாவ்.. செம்ம.. நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல்! சூப்பர் விக்னேஷ் சிவன்!

    நெட்டிசன்ஸ் கருத்து

    நெட்டிசன்ஸ் கருத்து

    இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்த தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பள்ளி பருவம் முதலே அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

    சீனியர் வாணி போஜன்

    சீனியர் வாணி போஜன்

    நண்பனாக இருக்கும் அசோக் செல்வனே கணவரானால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கருதும் ரித்திகா சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். அசோக் செல்வனும் அரைமனதுடன் சம்மதிக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த சூழலில் அசோக் செல்வனின் சீனியரான வாணி போஜன் என்ட்ரியாகிறார்.

    கடவுள்

    கடவுள்

    இதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனை விவாகரத்தில் முடிகிறது. அப்போது கடவுளாக விஜய் சேதுபதியும் அவரது அசிஸ்ட்டென்ட்டாக ரமெஷ் திலக்கும் என்ட்ரியாகின்றனர். அவர்கள் அசோக் செல்வனுக்கு இரண்டாவது ஆப்ஷன கொடுக்கின்றனர். விஜய் சேதுபதியும் ரமேஷ் திலக்கும் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாக உள்ளது.

    செம ட்ரீட்

    செம ட்ரீட்

    இதனை தொடர்ந்து யாருடன் அசோக் செல்வன் வாழ்கிறார் என்பதே க்ளைமேக்ஸ். எடுத்த எடுப்பிலேயே படத்தை ஆகா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். நிஜமாவே காதலர் தினத்துக்கு செம ட்ரீட்டாக உள்ளது ஓ மை கடவுளே என புகழ்ந்து வருகின்றனர் நெட்டின்கள். படத்தில் நடித்துள்ள அனைவருமே தங்களின் பங்குக்கு நடிப்பை அள்ளிக்கொட்டி இருக்கின்றனர் என புகழ்ந்துள்ளளனர்.

    லவ்லி பிலிம்

    படத்தை பார்த்த இந்த ரசிகர் தனது நண்பரிடம் படம் குறித்த தன்னுடைய கருத்தை சொல்வதாக இப்படியொரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதாவது, ஒரு ஓ மை கடவுளே படம் எப்படி உள்ளது என்று கேட்பதாகவும், அதற்கு உனக்கு சொன்ன புரியாது மச்சான், ஃபீல் குட்.. லவ்லி ஃபிலிம் என பதிவிட்டுள்ளார்.

    இன்டர்வெல் பிளாக் செம

    ஓ மை கடவுளே - பிரஷ்.. ரொம்ப ஃபிரஷ்.. பொழுது போக்கு மற்றும் சுவாரசியமான அடித்தளம். விஜய் சேதுபதி ரோல் ரொம்பவே முக்கியமான ரோல். அசோக் செல்வனுக்கு நல்ல பிரேத்துரு.. குறிப்பா இன்டர்வெல் பிளாக் செம என படத்தை புகழ்ந்து பேசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    100க்கு 80 மார்க்

    இப்போதான் ஓ மை கடவுளே பார்த்தேன்.. அசோக் செல்வனுக்கு ஒரு தெளிவான படம்.. ரித்திகா சிங்கிற்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அறிமுக இயக்குநரான அஷ்வத் சிறப்பாக செயல்படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் நூற்றுக்கு என்பது என மதிப்பெண் கொடுத்து பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    அற்புதமான அறிமுகம்

    ஓ மை கடவுளே படம் நிச்சயமாக கோலிவுட்டில் ஒரு நல்ல படம் நல்ல ரொமாண்டிக் படம், சிறந்த காட்சிகள், ஆசம் மியூஸிக் மற்றும் அனைத்து நடிகர்களின் எக்ஸலென்ட் பர்ஃபாமன்ஸ். மேலும் இயக்குநர் அஷ்வத்துக்கு ஒரு அற்புதமான அறிமுகம் என்று குறிப்பிட்டு படம் குறித்த தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

    English summary
    Netizens praising oh my kadavule movie. Oh my Kadavule movie released today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X