கேங்ஸ்டர் படம்னா இப்படி இருக்கணும் ... ரசிகர்களின் பாராட்டு மழையில் ராக்கி!
சென்னை: இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருக்க, தரமணி புகழ் வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ராக்கி
Recommended Video
முழுக்க முழுக்க ரவுடிசத்தையும் கேங்ஸ்டரையும் மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து வெளியிட்டுள்ள இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

ரவுடிஷத்தையும் கேங்க்ஸ்டரையும்
விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக பல தரமான திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி என்ற திரைப்படத்தையும் வெளியிடுகின்றனர். முற்றிலும் ரவுடிஷத்தையும் கேங்க்ஸ்டரையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது

பாரதிராஜா கேங்ஸ்டர் ரவுடியாக நடித்துள்ளார்
இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் கேங்ஸ்டர் ரவுடியாக நடித்துள்ளார். தரமணியில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே நல்ல நடிகர் என்ற பாராட்டுக்களை பெற்ற நடிகர் வசந்த் ரவி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். RA ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சி ஆர் மனோஜ் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் ரவீனா ரவி, ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைத்த தர்புகா சிவா இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

மேலும் கவனம் அதிகரித்துள்ளது
நீண்ட நாட்களாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்திய இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. நல்ல தரமான படங்கள் எங்கு இருந்தாலும் அதை முன்னோக்கி எடுத்துச் சென்று அதற்கு உரிய அங்கீகாரத்தை பெற்றுத் தரும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுவதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது மேலும் கவனம் அதிகரித்துள்ளது.

ரசிகர்களின் பாராட்டு மழையில் ராக்கி
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ள ராக்கி இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஒருபுறம் பாரதிராஜாவின் அட்டகாசமான நடிப்பு மற்றொருபுறம் வசந்த் ரவியின் அசராத நடிப்பு என பழிக்குப்பழி,வன்மம், தீராப் பகை என ரத்தமும் சதையுமாக பக்கா கேங்க்ஸ்டர் திரைப்படமாக வெளியாகி உள்ள இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்து என்ன பயங்கரம்
படத்தின் சில லென்த்தியான ஷார்ட்ஸ் மக்களை கொஞ்சம் போரடிக்க செய்கிறது என்று சிலர் கூறினாலும் அதே காட்சிகளை மிகவும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர் . படத்தின் எடிட்டிங் ஸ்டைல் படத்தின் கலர் டோன் பேசப்பட்ட வசனங்கள் ஒவ்வொன்றும் வெரைட்டியாக ரசிகர் மனதை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக கதாநாயகன் வசந்த் ரவி ஒவ்வொரு முறையும் தன் கைக்கடிகாரத்தை கழட்டும் பொழுதும் அதை சரி செய்து மீண்டும் மாட்டும் பொழுதும் அடுத்து என்ன பயங்கரம் நடக்கப்போகிறதோ என்கின்ற தாக்கம் அனைவரையும் பதைபதைக்க செய்கிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லி எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றும் அதை போட்டி போட்டுக் கொண்டு ரவுடி பிக்சர்ஸ் வாங்கி விட்டதால் பெருமனதுடன் அட்லி ஒப்புக்கொண்டார். தமிழகமெங்கும் இந்த படத்தின் வித்தியாசமான காட்சி பதிவு ரவுத்திரம் கலந்த கேமரா ஷார்ட்ஸ் பல இடங்களில் பேசப்படுகிறது. கண்டிப்பாக பழிவாங்கும் படங்களில் இந்தப் படம் மேக்கிங் மற்றும் ஹாலிவுட் தரத்திற்கான சில நுணுக்கமான விஷயங்களை கையாண்டதில் பாராட்டுகளை பெற்றுள்ளது


Click it and Unblock the Notifications











