Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷிவானி அம்மா கோபப்பட்டது நியாயம்தான்..அம்மாவுக்கு தான் தெரியும் அந்த வலி.ட்ரெண்டாகும் ஷிவானி அம்மா!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் ஷிவானியின் அம்மா அவரை வெளுத்து வாங்கியதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் ட்ரெண்டாகி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியது. ஃபிரீஸ் டாஸ்க்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது வாடிக்கைதான்.
புதுப்பேட்டை.. ஆயிரத்தில் ஒருவன் ரீ ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
அந்த வகையில் நேற்று ஷிவானியின் அம்மாவும் பாலாஜியின் சகோதரரும் வந்தனர். ஷிவானியின் அம்மா யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷிவானியை கிழித்து தொங்க விட்டார்.

கொட்டித்தீர்த்த அம்மா
ஏன் தனித்தன்மையோடு விளையாடவில்லை? பாலாஜிக்கு ஆயா வேலை செய்யதான் பிக்பாஸுக்கு வந்தீயா? என்றும் என் மானத்த குழி தோண்டி புதைத்து விட்டாய் என்றும் கொட்டி தீர்த்தார். உறவினர்கள் மத்தியில் தனக்கு பெரும் அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டாய் என்றும் விளாசி தள்ளினார்.

டிவிட்டரில் ட்ரெண்டிங்
இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷிவானியின் அம்மாவை பாராட்டி தள்ளினர். மேலும் ஷிவானியின் அம்மா கோபத்தில் நியாயம் உள்ளது, அம்மாவுக்கு தான் தெரியும் அந்த வலி என்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் முதல் முறையாக #Shivani என்ற ஹேஷ்டேக்குடன் ஷிவானியின அம்மா ட்ரெண்டாகி வருகிறார்.

எவ்வளவு மனசு உடைஞ்சுருந்தா?
ஷிவானி அம்மா கோவப்பட்டது நியாயம்தான். உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் எவ்வளவு விமர்சித்திருப்பார்கள் என்பது அவருக்குதான் தெரியும். எவ்வளவு மனசு உடைஞ்சுருந்தா இப்படி பேசுவாங்க... அவருடைய அம்மாவாக அவருடைய எமோஷன்ஸும் ஃபீலிங்குஸும் சரிதான் என்று பதிவிட்டுள்ளார்.

பெருமைபடுகிறோம்
ஷிவானி அம்மாவின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், வாவ்.. வாவ்.. அம்மா நீங்கள் சிறந்த வேலையை செய்துள்ளீர்கள்.. நாங்கள் உங்களால் பெருமை படுகிறோம். ஷிவானி அவருடைய தவறை உணருவார் என்று பதிவிட்டுள்ளார்.

வேறலெவல்
ஷிவானி அம்மா.. சூப்பருங்க.. வேற லெவல்.. ஷிவானிக்கு பதில் நீங்க பிக்பாஸுக்கு போட்டியாளரா வந்திருக்கலாம்.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கிழி கிழின்னு கிழிச்சுட்டாங்க
வெகேஷனுக்கு வந்துருக்கீயா.. என்னடா ஷிவானி அம்மா இந்த கிழி கிழிக்குறாங்க.. ப்பா.. கலா மாஸ்டர் சொல்ற மாதிரி கிழி, கிழி, கிழின்னு கிழிச்சுட்டாங்க.. அவருக்கு இது தேவைதான்...

அம்மாவுக்குதான் புரியும்
ஷிவானியின் அம்மா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், " அவனுக்கு ஆயாவேலை செய்ய வா வந்தாய்? " பெண்களின் அம்மாவுக்குதான் அந்த ஃபீல் புரியும்.. ஸ்ட்ராங்கா இருங்க ஷிவானி அம்மா.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஒரு தடவையாச்சும் கேட்டிருக்குமா?
ஷிவானி அம்மா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், பார்வையாளரா நமக்கே அவ்வளவு ஆந்திரம் வந்தது. அம்மாவா அவங்க நாக்க புடுங்க மாதிரி கேக்குறாங்களே பா.. இப்படி ஒரு அம்மாவுக்கு இப்படி ஒரு பொண்ணு.. ஆரி பேச்ச ஒருதடவையாச்சும் கேட்டுருக்குமா அந்த பொண்ணு.. என கேட்டுள்ளார்.

ஆரிக்கு நல்லது செய்திருக்கிறார்
அம்மா வந்தாங்க ஒரு கலக்கு கலக்கிட்டு போய்ட்டாங்க. சூறாவளி , புயல் வந்ததை போல இருந்துச்சு. ஷிவானி விட ஆரிக்கு நல்லது செய்து விட்டு போய் இருக்கிறார் அகிலா அம்மா.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பாலாஜியின் நட்பு
மற்றொரு நெட்டிசனான இவர், எந்த ஒரு அம்மாவும் தன் பெண்ணை வேண்டும் என்று அவமானப்படுத்த மாட்டார்கள்.. ஆரி எத்தனை முறை ஷிவானிக்கு தனித்துவமாக விளையாடு என்று சொன்ன போதும் பாலாஜியின் நட்பு காரணமாக ஆரியை நாமினேட் செய்தார்.. என்று பதிவிட்டுள்ளார்.

ஷிவானிக்கு தேவையா?
சுயமரியாதை இழந்த எந்த நட்பும் அன்பும் யாருக்குமே தேவையில்லை! அப்படி தாங்கும் அளவுக்கு அந்த நட்புக்கு நேர்மையா பாலா இல்ல! அவரை பொறுத்தவரை அவர் பேசும் போது எதிர்த்து பேசாத ஆள் ஷிவானி. இந்த ரோல் ஷிவானிக்கு தேவையா? என்று கேட்டுள்ளார்.

அதுக்குதான் திட்டினாங்க..
நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானி அம்மா ஏன் லவ் பண்றனு திட்டல! அவ ஏன் ஆயா வேலை பாக்கிறா திட்டுனாங்க! இரண்டுக்குப் வித்தியாசமிருக்கு!
திட்டுன முறை வேணா தப்பு! அவங்கம்மாவுக்கு அவள் குரல் அமிங்கிடுச்சுனு கோவம் என்று பதிவிட்டுள்ளார்.

எப்படி சரின்னு சொல்வாங்க?
ஷிவானி அம்மாவின் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், கல்யாணம் ஆன மகள்கள் கணவனுக்கு அடிமையாகாம சொந்த கால்ல நிக்கனும்னு. சொல்லி வளர்க்கும் தமிழ் அம்மாக்கள்! அவன் ஃபிரண்ட் சொல்றத கேட்டுட்டு அவன் சொல்றத தலையாட்டி கேட்டுக்கிட்டு நாமினேஷன்ல அவ முடிவெடுக்கிறத எப்படி சரினு சொல்லுவாங்க என்று பதிவிட்டுள்ளார்.

பாலாஜி சகோதரர்
ஷிவானி அம்மா மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அந்த வலியும் வேதனையும் தெரியும்.. பாலாஜி மாதிரி தான் அவன் சகோதரனும்.. "யார் எக்கேடு கெட்டால் உனக்கென்ன ஏறி கழுத்தில மிதிச்சுட்டு போய் கிட்டே இரு...." என்று பதிவிட்டுள்ளார்

மேனிப்புலேட்டிவ் நரி..
ஷிவானி பாலாஜி மாமாவின் ஆயா என்று பிராண்டிங் செய்ததே ரம்யாதான்.. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் மேனிப்புலேட்டிவ் நரி... என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.