அவங்கள சும்மா விடாதீங்க அக்கா.. வனிதாவை கொம்பு சீவி விடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: உங்களை பற்றி பேசிய அந்த நடிகையை சும்மா விடாதீர்கள் என நெட்டிசன்கள் வனிதாவுக்கு கொம்பு சீவி விட்டு வருகின்றனர்.

Recommended Video

ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய ஔவையார் | REWIND RAJA EP01 | FILMIBEAT TAMIL

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதிலும் ஏழரையை கூட்டிய அவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர். தொடர்ந்து சமூக வலைதளங்கள் தனது ஆபாச போட்டோக்களை ஷேர் செய்து வந்தார்.

மீரா மிதுன் விமர்சனம்

மீரா மிதுன் விமர்சனம்

பின்னர் கமல்ஹாசன் முதல் பல திரை பிரபலங்களையும் கடுமையாக சாடி வந்தார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் நெபோட்டிசம் இருப்பதாக கூறி விஜய், சூர்யா போன்ற நடிகர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து விமர்சனம்

தொடர்ந்து விமர்சனம்

குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் மீரா மிதுன் பேசியதால், அதே வார்த்தைகளாலே கடுமையாக பேசி அவரை அர்ச்சித்தனர் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள். இருப்பினும் அடங்காத மீரா மிதுன், தொடர்ந்து அவர்களை விமர்சித்து வருகிறார்.

கடுப்பான மீரா மிதுன்

கடுப்பான மீரா மிதுன்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை வனிதா, தமிழ் சினிமாவில் நெபோட்டிசமெல்லாம் இல்லை. மீரா மிதுன் பப்ளிசிட்டிக்காக பேசி வருவதாக கூறியிருந்தார். இதனால் கடுப்பான மீரா மிதுன் வனிதா மீது பாய்ந்துள்ளார்.

நெபோட்டிசம் புராடெக்ட்

நெபோட்டிசம் புராடெக்ட்

அதாவது நீங்களே நெபோட்டிசம் புராடெக்ட்தான், ஆகையால் வெளியே இருந்து வருபவர்களுக்கான என்னுடைய கருத்தை ஏற்க முடியாது என்றார். மேலும் பிக்பாஸ் வீட்டில் நான் சித்தபிரமை பிடித்ததுபோல் இருந்ததாக கூறியுள்ளீர்கள், நீங்கள் மற்ற பெண் போட்டியாளர்களின் பேச்சைக் கேட்டு நடந்தீர்கள் பின்னர் நான் நல்லவள் என்று புரிந்துக்கொண்டீர்கள் என்றும் கூறினார்.

தொப்பியில் சேர்ந்த இறகு

தொப்பியில் சேர்ந்த இறகு

மேலும் நான் பெரிய செலிபிரிட்டி என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நான் பப்ளிசிட்டிக்காக செய்கிறேன் என்கிறீர்கள், அதுதான் ஈகோவா? குற்றமில்லை.. அதைப்பற்றி யோசியுங்கள்.. பிக்பாஸ் என்னை செலிபிரிட்டியாக்கவில்லை, அது என் தொப்பியில் சேர்ந்த ஒரு இறகுதான் என்று கூறியுள்ளார்.

சும்மா விடாதீங்க

சும்மா விடாதீங்க

இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த எப்படி வனிதா அக்காவை பேசலாம் என வரிந்து கட்டியுள்ளனர். மேலும் வனிதாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு வனிதா அக்கா உங்களை பற்றி பேசிய மீரா மிதுனை சும்மா விடாதீர்கள் என்றும் கோர்த்துவிட்டு கொம்பு சீவிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X