டிடி எப்போ பீவி ஆனாங்கோ.. முஸ்லிம் பெண் தோற்றத்தில்.. ரம்ஜான் வாழ்த்து.. ரசிகர்கள் கேள்வி!

சென்னை: பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி எனும் டிடி நீலகண்டன் மதம் மாறி விட்டாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Recommended Video

DD Love for Money heist | DD Italian Song

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக இளமை அழகு மாறாமல் அப்படியே பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

நம்ம வீட்டுப் பொண்ணு

நம்ம வீட்டுப் பொண்ணு

கிட்டத்தட்ட 15 வருஷம் டிவியை திறந்தாலே திவ்யதர்ஷினியின் தரிசனமாகவே ரசிகர்களுக்கு இருக்கும். உங்களுக்கு என்னதாங்க வயசு ஆகுதுன்னு கேக்குற அளவுக்கு அவரது இளமையின் ரகசியம் பல பிரபலங்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. நம்ம வீட்டுப் பொண்ணாகவே டிடியை பலரும் பார்த்து வருகின்றனர்.

படங்களில்

படங்களில்

சின்னத்திரையில் மட்டுமின்றி ஜூலி கணபதி, நளதமயந்தி, விசில், சரோஜா, கோவா, பவர் பாண்டி, சர்வம் தாள மையம் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

ஹாலிவுட்

ஹாலிவுட்

டிஸ்னி தயாரிப்பில் பிரம்மாண்டமாக சமீபத்தில் வெளியான ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான Frozen 2 தமிழ் வெர்ஷனில் இளவரசி ஆனாவுக்கு குரல் கொடுத்திருந்தார். நாயகி எல்சாவுக்கு ஸ்ருதி ஹாசனும், பனியால் உருவாக்கப்பட்ட ஒலாஃப் பொம்மைக்கு சத்யனும் அந்தப்படத்தில் குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து

விவாகரத்து

எத்திராஜ் கல்லூரி மாணவியான டிடி, கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் விளம்பர படங்களில் எல்லாம் இணைந்து நடித்து வந்த அவர், குடும்ப பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்.

ரம்ஜான் வாழ்த்து

ரம்ஜான் வாழ்த்து

இந்நிலையில், ரமலான் மாதம் தொடங்கி இருப்பதை முன்னிட்டு, தனது சமூக வலைதள பக்கங்களில், முஸ்லிம் பெண் போல உடையணிந்து, உலகம் முழுவதும் ரமலான் நோன்பை கடைபிடிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் தனது ரம்ஜான் வாழ்த்துக்களை டிடி தெரிவித்துக் கொண்டார். மேலும், உலக நன்மைக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

மதம் மாறிட்டீங்களா

மதம் மாறிட்டீங்களா

திடீரென டிடியை முஸ்லீம் பீவி தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள், ஷாக் ஆகியுள்ளனர். என்னங்க உங்க வாழ்த்துக்கள், தோற்றத்தை எல்லாம் பார்த்தால், மதம் மாறீட்டீங்க போல தெரிகிறதே என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்லாமிய நண்பர்கள் திவ்ய தர்ஷினிக்கு ரம்ஜான் நோன்பு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழ் புத்தாண்டு தினத்துக்கும் சேலை கட்டி டிடி வாழ்த்து சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X