அது எப்படிங்க பாத்டப் நீரில் மூழ்கி இறக்க முடியும்?: 'து. சாம்பு'வாக மாறிய நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: அது எப்படி ஒருவர் குளியல் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கி இறக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
இந்நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் கூறியிருப்பதாவது,
பாத்டப்
ஆரோக்கியமான பெண்கள் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறப்பார்களா? என பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கேள்வி எழுப்பியுள்ளார்.
நம்ப முடியவில்லை
அது எப்படி ஒருவர் குளியல் தொட்டி நீரில் மூழ்க முடியும்... என்னால் இதை நம்பவே முடியவில்லை என்று ஒருவர் ட்வீட்டியுள்ளார்.
படமா?
குளியல் தொட்டி நீரில் மூழ்கி ஸ்ரீதேவி பலி? இது என்ன ஷெர்லாக் ஹோம்ஸ் காட்சியா?
மது
மதுபோதையில் இருந்தார் என்றால் அவரால் பாத்ரூம் கதவை உள்ளிருந்து எப்படி பூட்ட முடியும்? அவர் வெகுநேரமாக வெளியே வராததால் போனி கபூர் கதவை உடைத்ததாக கூறப்பட்டதே என்று ஒருவர் கேட்டுள்ளார்.
மயக்கம்
உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்திய ஸ்ரீதேவி எப்படி குளியல் தொட்டியில் மயங்கியிருக்க முடியும். இதில் ஏதோ இருக்கிறது.


Click it and Unblock the Notifications











