ஆரி, ரியோவை விட ஷிவானி, கேபி, ஆஜீத் எல்லாம் என்ன பண்ணிட்டாங்க.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் ஈடுபாடு குறைவான போட்டியாளர்கள் என ஆரியையும், ரியோவையும் ஹவுஸ்மேட்களில் சிலர் டார்கெட் செய்து நாமினேட் செய்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டை மூன்றாவது புரமோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

கடந்த வாரம் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்பிய காரணத்தால் தான் இந்த வாரம் ஆரி மற்றும் ரியோவை திட்டமிட்டு பழிவாங்குகிறது அந்த குரூப் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

மேலும், ஆரி மற்றும் ரியோவை விட ஷிவானி, ரம்யா, ரமேஷ், ஆஜீத், கேபி, சோம், நிஷா, அனிதா எல்லாம் என்ன செய்தனர் இந்த வாரம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

போலி வேசம்

போலி வேசம்

"அண்ணன் தங்கை என போலி வேசம் போட்டு கூத்தடிக்கிறயே!... தைரியமாக சொல்ல உனக்கு தெம்பு இருக்கா பயில்வான்!... பூசிமொழுகாதே!..." என்றும் "டேய் பயில்வான்!.. அத்தனை அடாவடியும் பண்ணிட்டு ஹானஸ்டா இருக்கேன்னு கதைவிடுறியே நீயெல்லாம் என்ன பிறவியோ.." என இந்த பிக் பாஸ் ரசிகர்கள் பாலாவை வெளுத்து வாங்கி உள்ளார்.

இவங்கதான் வொர்ஸ்ட்

இவங்கதான் வொர்ஸ்ட்

இந்த வாரம் கொடுக்கப்பட்ட கஸ்டமர் கேர் டாஸ்க்கில் சோமசேகருக்காக விட்டுக் கொடுத்த கேபி, ரியோவுக்காக விட்டுக் கொடுத்த ஆஜீத் மற்றும் ஜித்தன் ரமேஷிடம் பிச்சை எடுத்து கால் கட் பண்ண சொன்ன ரம்யா பாண்டியன், இவங்க தான் வொர்ஸ் பர்ஃபார்மர் என்றும் ரியோவும் ஆரியும் கிடையாது என்றும் இந்த ரசிகை பாயின்ட்டோடு ட்வீட் செய்துள்ளார்.

ஆரி உனக்கு கால் பண்ணியிருக்கணும்

ஆரி உனக்கு கால் பண்ணியிருக்கணும்

ஆண் பெண் என வேறுபாடு பார்த்து அவர் கேள்வி கேட்கிறாரோ என எனக்கு தோணுது என பாலா ஆரியை நாமினேட் செய்ததை பார்த்த ரசிகர்கள், அது உண்மை தான் பாலா, அர்ச்சும்மா உன்னை வளைக்க உனக்கு போன் போட்டு சேவ் பண்ணிட்டாங்க, இதே பாலா உனக்கு கால் பண்ணியிருந்தா, நீ போன் கால கட் பண்ணியிருக்கமாட்ட உடைச்சிருப்பேன் என ஆரியின் ஆர்மியினர் விளாசி வருகின்றனர்.

ஷிவானியின் ஈடுபாடு

ஷிவானியின் ஈடுபாடு

ஷிவானிக்கு பிக் பாஸ் வீட்டுல ஈடுபாடு கிடையாது, ஷிவானிக்கு பாலா மேல தான் ஈடுபாடு, இதைத் தான் ஜெயிலுக்கு அனுப்பி இருக்கணும், எல்லாருக்கும் ஷிவானி கொஞ்சம் மிக்சர் கொடுக்கிறாங்க என்பதற்காக யாரும் அவங்களை ஜெயிலுக்கு அனுப்ப மாட்றாங்க என இன்னொரு நெட்டிசன் வேற லெவலில் ட்ரோல் செய்துள்ளார்.

Recommended Video

Aari or Bala? Who is the hero | BIG BOSS TAMIL | Filmibeat Tamil
நிஷாக்கு ஏன் ஷாக்கடிக்குது

நிஷாக்கு ஏன் ஷாக்கடிக்குது

சனம் ஷெட்டி பிக் பாஸ்கிட்ட பேசினா, நிஷாக்கு ஏன் ஷாக் ஆடிக்குது, நல்லா உங்க சாமியாரம்மா அர்ச்சனா மந்திரிச்சி விட்டது வேலை செய்யுது போல, ரியோவையும், ஆரியையும் ஈடுபாடு குறைவானவர்கள் என தேர்வு செய்தது சரி தான் என பாலா ஆர்மியினரும் பதிலுக்கு மல்லுக்கட்ட கமெண்ட் செக்‌ஷன் களைகட்டுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X