Vijay: விஜய்யின் தவெகவில் இணைந்தாரா வெற்றி மாறன்.. மதுரையில் ராஜ மரியாதையோடு வரவேற்ற தொண்டர்கள்!

சென்னை: நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது ரசிகர் மனறத்தினை, அரசியல் கட்சியாக மாற்றினார். கடந்த சில ஆண்டுகளாகவே, விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு இதே தேதியில், தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினைத் தொடங்கினார். இன்று தனது இரண்டாவது ஆண்டில் தவெக அடியெடுத்து வைக்கின்றது. இப்படியான நிலையில், மதுரையில் நடைபெற்ற, நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றி மாறன் கலந்து கொண்டுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தினைத் தொடங்கினார். இவரது அரசியல் வருகை எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவரது அரசியல் நிலைப்பாடு, பல கேள்விகளை எழுப்பியது. அதாவது, 2026ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில்தான் களமிறங்குவோம் என்ற நிலைப்பாட்டுடனே களமிறங்கினார். இது விமர்சனத்தினை எழுப்பியது. அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை. இதுவே விமர்சனங்களை எழுப்பியது.

vijay vetri maaran tvk

ஆனாலும் படப்பிடிப்பு, அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகின்றார். கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகியிருந்தாலும், இன்னும் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருப்பது. தவெக தரப்பில் மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பது என பல குற்றச்சாட்டுகளும் இவர் மீது வைக்கப்படுகின்றது. தவெக தரப்பில் செய்தியாளர்களைச் சந்திப்பவராக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளார். ஆனால், அவரும் பல கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையே கொடுத்து விடுகின்றார். ஆனந்தைத் தவிர தவெக தரப்பில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் என யாருமே இல்லை. சில தினங்களுக்கு முன்னர், ஆதவ் அர்ஜுனா இணைந்துள்ளார். இவரை இரண்டாம் நிலைத் தலைவராக எடுத்துக் கொள்ளலாம்.

தவெக: தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு முடிவடைந்து இரண்டாவது ஆண்டு இன்றுடன் தொடங்குகின்றது. இப்படியான நிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இரண்டாம் ஆண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகத்தில், நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராசர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் என இவர்கள் 5 பேரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.

vijay vetri maaran tvk

மதுரை: இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு செய்த கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகள் பரவலாக நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில்தான், மதுரையில் தவெக நிர்வாகிகள் சார்பில் நடத்தப்பட்ட இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி மாறன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெற்றி மாறனுக்கு, மதுரை தவெக நிர்வாகிகள் ராஜ மரியாதை வழங்கி வரவேற்றனர்.

vijay vetri maaran tvk

வெற்றி மாறன்: குறிப்பாக, வெற்றி மாறனுக்கு சால்வை அணிவித்தும், மிகப்பெரிய ராட்சத மாலை அணிவித்தும் வரவேற்றனர். இதனைப் பார்த்த இணையவாசிகள், வெற்றி மாறன், விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டார்போல என பேசி வருகின்றனர். ஆனால் வெற்றி மாறன் தவெகவில் இணைந்ததாக தவெக தரப்பில் இருந்தோ, வெற்றி மாறன் தரப்பில் இருந்தோ, எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X