இது வேறயா... ரஜினி டயலாக் பேசிய மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன பாருங்க!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்தின் டயலாக்கை பேசிய நடிகை மீரா மிதுனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
நடிகை மீரா மிதுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். ஆனால் அதில் தனக்கு திருமணம் ஆனதையும் தனது வயது குறித்து தவறான தகவலையும் அளித்ததாக புகார் எழுந்தது.
அதோடு அழகிப்போட்டி நடத்துவதாக கூறி பலரிடம் பணமோசடி செய்ததாகவும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனால் மீரா மிதுனுக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

சரி செய்ய
தொடர்ந்து சர்ச்சைகளுக்கு ஆளான மீரா மிதுன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். டேமேஜ்ஜான பெயரை எப்படியாவது சரி செய்துவிடலாம் என்று எண்ணி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் மீரா மிதுன்.

அதிர்ச்சி
ஆனால் முதலுக்கே ஆபத்து என்பது போல் அங்கேயும் வாயை வைத்துக் கொண்ட சும்மா இருக்காமல் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறினார். இதனால் ஒட்டு மொத்த திரைத்துறையும் அதிர்ந்து போனது.

சர்ச்சை
இந்த குற்றச்சாட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன் என்ன செய்தாலும் பேசினாலும் சர்ச்சையாகவே முடிகிறது.
மீரா மிதுன் வீடியோ
மேலும் அவர் எதை செய்தாலும் அவரை மரண கலாய் கலாய்க்கின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் தற்போது, தான் சென்னை வரபோவதாக கூறி நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார் மீரா மிதுன்.

குதிரைடா..
அதில் விழுந்தா அப்படியே கிடக்க நான் என்ன யானையா, குதிரைடா என்று ரஜினி விழா ஒன்றில் பேசிய டயலாக்கை மேற்கோள் காட்டினார். மேலும் வந்துட்டேன்டா, திரும்ப வந்துட்டேன்டா என்றும் பேசினார் மீரா மிதுன்.
ரஜினி டயலாக்
இதனை பார்த்த நெட்டிசன்கள் தயவு செய்து சென்னைக்கு திரும்பி வந்துடாதீங்க.. அங்கேயே இருந்துவிடுங்கள் என கெஞ்சி வருகின்றனர். மேலும் நீயெல்லாம் ரஜினி டயலாக் பேசும் நிலைமை வந்துவிட்டதே என தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











