இதுக்கெல்லாமா விளம்பரம்.. சிம்பு போட்ட போட்டோவை பார்த்து நொந்துகொள்ளும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

Simbu- STR எடுத்த புது அவதாரம்

சென்னை: நடிகர் சிம்பு வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு கூடவா விளம்பரம் என கேட்டு நொந்து கொள்கின்றனர்.

நடிகர் சிம்புவின் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து விடுகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்தில் சிம்பு நடிக்க இருந்தார். ஆனால் படப்பிடிப்புக்கு அவர் வராததால் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை இயக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சிம்புவின் தாயார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். சிம்பு படத்தில் சொன்னப்படி நடித்துக்கொடுப்பார் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து சிம்பு மீண்டும் 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

40 நாள் விரதம்

40 நாள் விரதம்

படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, சிம்பு சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து 40 விரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 வருடங்களுக்குப் பிறகு

27 வருடங்களுக்குப் பிறகு

நடிகர் சிம்பு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நடந்து செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிம்பு 27 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லவுள்ளார் என தெரிகிறது.

தொழிலில் சிக்கல்

தொழிலில் சிக்கல்

தள்ளிப் போகும் திருமணம், தொழிலிலும் சிக்கல் என தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வரும் சிம்பு பிரச்சனைகள் தீரவும் நிம்மதி கிடைக்கவும் வேண்டி சபரி மலைக்கு மாலை போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நொந்துபோன ரசிகர்கள்

நொந்துபோன ரசிகர்கள்

இந்த தகவல் ஒரு புறம் இருக்க சிம்பு, கறுப்பு உடையில் அய்யப்பன் கோவிலில் வழிபடும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு கூடவா விளம்பரம் செய்வீர்கள் என நொந்து கொள்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X