இன்னும் கொஞ்ச நாள்தான்.. பிக்பாஸ் குறித்து டிவிட்டிய விஜய் டிவி.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் குறித்து ஓவர் கான்ஃபிடன்ஸில் டிவிட்டிய விஜய் டிவிக்கு நெட்டிசன்கள் நச்சு பதிலடி கொடுத்துள்ளனர்.
Recommended Video
விஜய் டிவியில் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தேர்வு பணி முடிந்து விட்டதாகவும் அவர்கள் கொரோனா தடுப்பு முறைப்படி, பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்படுவதற்கு முன்பு 15 நாட்கள் தனிமை படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரண்டு புரமோக்கள்
இந்நிலையில் ரசிகர்களை பிக்பாஸ் ட்ராக்கில் கொண்டு வரும் வகையில் சமூக வலைதளங்களிலும் அதற்கான பணியை தொடங்கியுள்ளது நிகழ்சச்சி குழு. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இரண்டு புரமோக்கள் வெளியாகியுள்ளது.

போட்டோக்கள்
இதில் இரண்டாவது புரமோ நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளார். அதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரவர் வீட்டில் நடக்கும் ஆன் லைன் கிளாஸ் தொடர்பான போட்டோக்களை ஷேர் செய்ய சொன்னார் பிக்பாஸ்.

டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்
நேற்று சும்மா சொல்லுங்க லிஸ்ட் மேட்சாகுதான்னு பார்ப்போம் என்று பிக்பாஸ் கன்டெஸ்ட்டன்ட்ஸ் குறித்து கெஸ் பண்ண சொல்லி டாஸ்க் கொடுத்தார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் தொடர்பாக மேலும் ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளனர்.

தினமும் செம்மயா..
அதாவது, இன்னும் கொஞ்ச நாள் தான்.. அப்புறம் தினமும் இந்நேரம் செம்மயா ஒரு ப்ரோமோ வந்திரும்! என ஸ்மைலியுடன் போஸ்ட் செய்திருந்தனர். அதனை பார்த்த நெட்டிசன்கள், புரமோ வரும்னு சொல்லுங்க, நல்லா இருக்கா இல்லையான்னு நாங்க டிசைட் பண்ணிக்றோம் என பல்ப் கொடுத்துள்ளனர்.

நாங்க சொல்றோம்
மற்றொரு நெட்டிசனான இவர், புரமோ செமயா இல்லையாளன்னு நாங்க சொல்றோம்.. டாஸ்க் மட்டும் ஒழுங்கா கொடுக்குற வேலைய நீங்க பாருங்க.. உட்காந்து மொக்க போடாதீங்க ஃபேன்ஸி டிரெஸ் போட்டி நடத்திக்கிட்டு என பங்கம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











