பின்னாடி ஒரு பிரச்சனை ரெடியாகுது.. அன்சீன் புரமோவை பார்த்து அலர்ட்டாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் சம்யுக்தா ஏதோ ஒரு பிரச்சனைக்கு ரெடியாகி வருவதாக கூறியுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் லெட்டர் டாஸ்க் குறித்து நிஷாவை கிண்டலடித்து கொண்டிருக்கிறார். நிஷா லெட்டர் முழுக்க காசு பற்றியும் தீனி பற்றியும் மட்டுமே இருப்பதாக கலாய்க்கிறார்.
அப்போது சம்யுக்தா கிட்சனில் ஏதோ பேசியப்படி ரியோவும் நிஷாவும் பேசுவதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏதோ பிரச்சனை ரெடியாவதாக கூறியுள்ளனர்.

கப்பு சிப்பு வேலை
ஆரி போட்டப்போடுல பாலாஜி கிளப்ல 5 பேரும் நாமினேஷன்ல.. என்ன கப்பு சிப்பு வேலை நடக்குது பின்னாடி.. என்ன இருந்தாலும் சிசிடிவி மாறி கேப்டன் வாட்ச் பண்ணுவாருங்கிற பயம் நல்லது என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

என்ன ஒரு ராஜ தந்திரம்
விஜய் டிவி இன்று மூன்றாவது புரமோவை ஷேர் செய்யாததை கவனித்த இந்த நெட்டிசன், ஓ இங்க ப்ரோமோ போடுறதுனால அங்க ப்ரோமோ போடுறது இல்லையோ... என்ன ஒரு ராஜ தந்திரம் என கலாய்த்துள்ளார்.

பிரச்சனை ரெடியாகுது..
பின்னாடி ஒரு பிரச்சனை ரெடி ஆகுது நோட் பண்ணவும் என சம்யுக்தா கிட்சனில் பேசிக் கொண்டிருப்பதை கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தெரியும்டா ராசா..
இதை பார்க்கும் போது தெரியுது இன்றைக்கு எபிசோடு காத்து வாங்க போது என்று.. புரமோ 3 நீ ஒழிக்கும் போது எங்களுக்கு தெரியும்டா ராசா என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

முட்டு கொடுக்றீங்க..
இருந்தாலும் நீங்க ரொம்ப பாவம்டா.. இல்ல கன்டென்ட் எடுத்து.. எடிட் பண்ணி.. முட்டு கொடுக்றீங்க என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











