என்னம்மா சனம்.. உங்க அப்பா வயசுல இருக்காரு.. போடா வாடான்னு பேசுற.. கடுப்பாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தியை போடா வாடா என பேசியது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Day 17 • Promo 2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் இடையில் மறைத்த துணியை அரசரான சுரேஷ் சக்கரவர்த்தி விலக்க முயன்ற போது அவர் கையில் வைத்திருந்த ஆயுதம் சனம் ஷெட்டியின் முகத்தில் பட்டது.

இதனால் கடுப்பான சனம் ஷெட்டி, வயதில் பெரியவர் என்றும் பார்க்காமல் சுரேஷ் சக்கரவர்த்தியை போடா வாடா என கேவலமாக பேசுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னதான் கோபம் என்றாலும் இப்படியா பேசுவது என விளாசியுள்ளனர்.

கேவலமா போக போகுது

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தி ரெண்டு பேரும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சவங்க இல்ல.. இவங்க ரெண்டு பேரால் மொத்த ஷோவும் கேவலமா போக போகுது என கூறியுள்ளார்.

சத்தமில்லாம கத்தும்மா

புரமோவில் சனம் கத்துவதை பார்த்த இந்த நெட்டிசன்ன, சனம்.. "உனக்கு மனசு இருக்கோ இல்லையோ.. எங்களுக்கு காது இருக்கும்மா.. கொஞ்சம் சத்தமில்லாம கத்தும்மா! என கலாய்த்துள்ளார்.

வெளியே அனுப்பினால்

மற்றொரு நெட்டிசனான இவர், நல்ல காலம் ஃபிஸிக்கல் அட்டாக்குன்னு தலைவன பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேத்தல.. அவரை வெளியேற்றினால், சனம் ஷெட்டியையும் வெளியேற்ற வேண்டும் என சுரேஷ் சக்கரவர்த்தியும் ஆர்க்யூ பண்ணுவாரு என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

ஆரஞ்ச் தோல் ஸ்பிரே

சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டியின் நெற்றில விளையாட்டாக அடிச்சது தப்புன்னா, சனம் ஷெட்டி, ரியோ ராஜ் மற்றும் பலர் ஆரஞ்ச் தோல் ஸ்பிரே அடிச்சு டார்ச்சர் பண்ணியதும் தவறு. வெளியேற்றுவதாய் இருந்தால் இப்படி தப்பு செஞ்சவங்க எல்லாரையும் வெளியேற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

வேற ஏதாவது செய்யலாம்

புரமோவில் சனம் ஷெட்டி சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த விளையாட்டு விளையாடுறதுக்கு நீங்க வேற எதாவது செய்யலாம்! என ஆரி ஸ்டைலில் கூறியுள்ளார்.

ரியோ போட்ட ஸ்கெட்ச்

விளையாட்டுல அடிபடுறது சகஜம். ஆனால் விளையாட்டை விபத்தாக மாற்றியது ரியோதான். ரியோ துணியால உயர்த்தி தூக்கிப்பிடித்து மறைக்காம இருந்திருந்தா..! சுரேஷ் சக்கரவர்த்தி மறைக்கப் பயன்படுத்திய துணியை செங்கோலால் விலக்கியிருக்க மாட்டார். இது ரியோ போட்ட ஸ்கெட்ச் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அப்பா மாதிரி இருக்காரு

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னமா சனம்.. உங்க அப்பா மாதிரி இருக்காரு அந்த ஐயா.. சுரேஷ் சார பார்த்து வாடா போடான்னு பேசுற ச்சே.. என விளாசியிருக்கிறார்.

தெரியாம பட்டு இருக்கும்

மற்றொரு நெட்டிசனான இவர், யாராவது வேணும்னு அடிப்பாங்களா.. அது தெரியாம பட்டு இருக்கும் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

மொக்கை சண்டை

மற்றொரு நெட்டிசனான இவர் நேத்து இப்படித்தான் காட்டுனீங்க... பாலாஜி ஏதோ பண்றது போல.. மொக்க சண்டை.. இப்போ இது... எடிட்டர் நீங்க வேற லெவல்....அடி தூள்.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X