twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் நாளிலேயே ரூ. 1 கோடி வசூலித்த திரௌபதி.. இரண்டாம் நாள் எப்படி இருக்கு.. நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்ஸ்!

    |

    சென்னை: திரௌபதி படம் நேற்று வெளியான நிலையில் இரண்டாவது நாளான இன்றும் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இரு சமூகத்தினர் இடையே உள்ள நாடகக் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளை கூறும் படமாக திரௌபதி படம் உள்ளது. இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி லீடிங் ரோலில் நடித்திருக்கிறார்.

    இயக்குநர் மோகன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நேற்று வெளியான இப்படத்திற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.

    கருத்துக்கள்

    ஆனாலும் முதல் நாளிலேயே திரௌபதி படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனை தொடர்ந்து திரௌபதி காட்சியிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை இந்நிலையில் இரண்டாம் நாளான இன்றும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றும் படத்தை பாராட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

    உடைத்தெறிந்துள்ளது

    கேர்ள் : இனிமேல் எனக்கு கால் பண்ணாதடா நாம பிரேக்கப் பண்ணிக்கலாம்....!
    சண்டாளி #திரௌபதி படம் பாத்துட்டா போல...! என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன். நாணயத்தின் ஒருபக்கம் அசுரன் படம்,அதே நாணயத்தின் மறுபக்கத்தையும் சேர்த்தால் அது
    #திரௌபதி. இதுவரை மற்ற சமூகங்கள் மீது உள்ள வன்மையினால் ஒருபக்கம் மட்டுமே சொல்லப்பட்டு வந்தது,#திரெளபதி அதை உடைத்தெறிந்துள்ளது. என தெரிவித்திருக்கிறார் இவர்.

    பெண்களுக்கான விழிப்புணர்வு

    திரௌபதி யில் நடந்து கொண்டிருக்கும் உண்மையை சொல்லியாதால் அதை இயக்கிய இயக்குனரை கொண்டாடுகிறோம். அசுரனை போல் முடிந்து போன கதையை படமாக எடுக்கவில்லை என கூறியிருக்கிறார் இவர். சில அரசியல் தலைவர்கள் இந்தப்படத்தை பெருமையாக பேசியதால் இது ஜாதி படமாக பார்க்கப்படுகிறது. என் பார்வையில் இது பெண்களுக்கான விழிப்புணர்வு படம். ஒரு காட்சியில் பொள்ளாச்சில் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.
    மற்ற படங்களைப் போல சாதாரண மனநிலையில் படத்தை பார்க்க செல்லுங்கள் என கூறியிருக்கிறார் இவர்.

    அக்னி பிழம்பாய்

    குறியீடுகளை நான் அவதானிக்கவில்லை. எனக்கு தேவையுமில்லை #திரௌபதி யை படமாக மட்டுமே பார்த்தேன் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். புதுவை திரையுலக வரலாற்றிலேயே முதன்முறையாக 13 திரையரங்குகளில் ஒரு படம் வெளியாவது இதுவே முதன் முறை அக்னி பிழம்பாய் #திரௌபதி தாய் என்று கூறியிருக்கிறார் இவர்.

    மகிழ்ச்சி

    #திரௌபதி விமர்சனங்கள், வசூல் என எது எதிர்மறையாக இருப்பினும் , இதுநாள் வரை மறைக்கப்பட்டிருந்த நாணயத்தின் மறுபக்கம் சமூக அவலங்களான நாடக காதல் ,சாதியின் போர்வையில் நடைபெறும் தீமைகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கண்முன்னே நடந்து வருவது மகிழ்ச்சி என கூறியிருக்கிறார் இவர்.

    நாளைய சரித்திரம் பேசும்

    பெண் குழந்தைகளை பெற்றவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என கூறியிருக்கிறார் இந்த ரசிகர். இந்த வெற்றியை நாளைய சரித்திரம் பேசும் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒபனிங் இந்த #திரௌபதி என குறிப்பிட்டுள்ளார் இவர். #திரௌபதி விஸ்வாசம் நேர்கொண்டபார்வை படங்களுக்கு பிறகு தியேட்டர் சென்று நான் பார்த்த படம். என பதிவிட்டுள்ளார் இவர்.

    அரங்கம் நிறைந்து

    திரௌபதி அண்ணன் இயக்குனர் மோகன் அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள். திரௌபதி இந்த படம் வேர லெவல்ங்க. கம்மியான முதலீடு அதிக உழைப்பால் வெளிவந்த திரைப்படம். உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி அண்ணா சோழ வம்சம் என குறிப்பிட்டுள்ளார் இவர். திருமண மண்டபங்களாக
    மாற இருந்த திரை அரங்குகள் பல ஆண்டுகளுக்கு பின் அரங்கம்
    நிறைந்து காட்சியளிக்கிறது. #திரௌபதி

    பாதிக்கப்பட்டவர்கள்

    நாடக காதலால் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாயங்களும் திரெளபதி படத்தினை கொண்டாடி வருகின்றனர்...! என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன். நீண்ட காலத்துக்குப் பிறகு திரையரங்கில் .. ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில்... முதல் நாள் திரைப்பட கொண்டாட்டத்தில் இதுவரை ரஜினி படம் தவிர்த்து யார் படத்திற்கும் சென்றது கிடையாது.. திரெளபதி என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

    மிகவும் அருமை

    குடும்பங்கள் கொண்டாட வேண்டிய படம் திரெளபதி என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன். படம் மிகவும் நன்றாக உள்ளது ... தரமான சம்பவம்...தல படத்தை தவிர்த்து விசில் அடித்து கத்தி பார்த்த முதல் படம் ... எதிர் பார்த்ததை விட படம் மிகவும் அருமை என பாராட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    English summary
    Fans praising Draupathi movie for second day. Draupathi movie collected Rs 1 crore in first day itself.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X