போதும் தாயி.. எங்களுக்குதான் ஷாக்.. நிஷாவின் ரியாக்ஷனால் எரிச்சலான நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நிஷா ஷாக்கானதை பார்த்த ரசிகர்கள் செம டென்ஷனாகியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் நிஷா இந்த வாரம் காப்பாற்றப்படுவதாக கூறினார் கமல். இதனைக் கேட்டு நிஷா செம ஷாக்கானார்.
ஏற்கனவே சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கடுப்பில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில், நிஷா சேவானதையும் அதற்கு அன்பு கேங்க் கொடுத்த ரியாக்ஷனையும் பார்த்து செம காண்டாகியுள்ளனர்.

எங்களுக்குதான் ஷாக்
இரண்டாவது புரமோவில் தான் சேவ் செய்யப்பட்டுவிட்டதாக கமல் அறிவித்ததை தொடர்ந்து, நிஷா ஷாக்கானார். அதனை பார்த்த இந்த நெட்டிசன, போதும் தாயி!.... எங்களுக்குதான் "ஷாக்!... என கலாய்த்துள்ளார்.

தெரிஞ்சது தானே
நிஷாவின் ரியாக்ஷனை பார்த்த இந்த நெட்டிசன், இதுல ஷாக் தேவை இல்லையே.. தெரிஞ்சது தானே. அத ஏன் உருட்டுக்கிட்டு என கிண்டலடித்துள்ளார்.

நீலிக்கண்ணீர் விட்டு..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வர வர எனக்கும் இந்த பாலாஜியை விட, அர்ச்சனாவ பாக்கும் போது கடுப்பு ஆகுதோ என கேட்டுள்ளார். மேலும் இப்படி நீலிக்கண்ணீர் விட்டு விட்டே பைனல் போயிடுவா போல என்றும் கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

சுத்த வேஸ்ட்..
கமல் சார் தப்பை தட்டிக்கேட்க சரியான ஆள் இல்லை அநியாயத்துக்கு தடவிக்கொடுக்குறாரு. ஹிந்தி அன்ட் தெலூங்கு பிக்பாஸ்ன்னா இந்த நேரம் பயில்வானை வைச்சி செஞ்சி வெளிய தொரத்தி இருப்பாங்க.ஆனா எல்லாரையும் அவமானப்படுத்திட்டு இன்னும் உள்ளதான் சுத்திக்கிட்டு இருக்கான் சுத்த வேஸ்ட் பிக்பாஸ் தமிழ் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கிளிப்பிள்ளை போல..
கமல் சார் உங்க மேல இருந்து மதிப்பு போச்சு.. அது எப்படி சார் பிக் பாஸ் குழுவினர் சொன்னது அப்படியே கிளிப்பிள்ளை போல இங்கு வந்து சொல்லுறீங்களே சார்.. என்று கமல் மீதான தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

அன்பு அரங்கேற்றம்..
நிஷா சேவ் ஆனதை அறிந்து, அர்ச்சனா கண்ணீர் விட்டதை பார்த்த இந்த நெட்டிசன், அன்பு நாடகத்தை அரங்கேற்றம் செய்தபோது.. என கலாய்த்துள்ளார்.

நாங்க என்ன முட்டாளா?
ஆடியன்ஸ் நாங்க எங்க பணத்தை கொடுத்து நேரத்தையும் வீணாக்கி நல்லவங்களுக்கு வாக்கு போட்டா விஜய் டிவி நீ எடுக்குறதுதான் முடிவுன்னு உனக்கேத்தவங்களுக்கு உதவிபண்ணி உள்ள வைச்சிக்குறீங்க. அப்போ மக்களாகிய நாங்க என்ன முட்டாளா? எங்க பணம் வேணும் ஆனா முடிவை நீங்கதான் எடுப்பீங்க அப்படியா என கேட்டுள்ளார்.

விஜய் டிவி முடிவு
சனம், அனிதா, ஆரி மூவர் மட்டுமே தனித்துவமான போட்டியாளர்கள்.. இதில் ஆரி நியாயமாகவும், சனம் போட்டியாகவும், அனிதா தன்நிலை சரியென நினைத்தும் விளையாடுகிறார்கள்.. ஆனால் குழுவாக விளையாடுபவர்களே தகுதியான போட்டியாளர்கள் என விஜய் டிவி முடிவு எடுக்கிறது போல என்று கூறியுள்ளார்.

அன்புதான் ஜெயிக்க வச்சுருக்குன்னு..
நீங்க இப்படியே நிஷாவ சேவ் பண்ணுங்க அவங்க அன்பு தான் ஜெயிக்க வச்சிருக்கு என்டு சொல்லி திரிவாங்க ஏன்டா இப்படி அநியாயம் பண்றீங்க என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











