ஆரி இனி அட்வைஸ் பண்ணமாட்டாரு! அடுத்த லெவலுக்கு போயிட்டாரு.. மிரண்டு போன நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் டாஸ்க்கின் போது ஆரி கோபப்பட்டதை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸ்ரி பட்ஜெட் டாஸ்க்காக நாடாய் இல்ல காடாய் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நேற்று அரக்கக் குடும்பமாய் இருந்தவர்கள் இன்று அரச குடும்பமாய் மாறியுள்ளனர்.
அதன்படி இளவரசரான ஆரியை அடிமையாக்குகிறார்கள் அரக்க கூட்டத்தினர். இதனை ஏற்காத ஆரி, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றார்.

ஆவேசமாகியுள்ள ஆரி
இதுவரை அமைதியாக அட்வைஸ் செய்து வந்த ஆரி தற்போது ஆவேசமாகியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள், நம்ம ஆரியா இது என ஆச்சரியப்பட்டுள்ளனர். அட்வைஸ் செய்கிறார் என்ற காரணத்தை கூறியே ஹவுஸ் மேட்ஸ் அவரை நாமினேட் செய்துள்ளனர்.
அடுத்த லெவலுக்கு போய்ட்டாரு
தற்போது நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள ஆரி, இங்கு சண்டை போட்டால்தான் சஸ்டைன் ஆக முடியும் என புரிந்துகொண்டார் போல. ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கவலை வேண்டாம் தம்பி.. ஆரி இனி அட்வைஸ் பண்ணமாட்டாரு! அடுத்த லெவலுக்கு போயிட்டாரு என கூறியுள்ளார்.
நங்கூரத்தை..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி சண்டை போடுவதை பார்த்துவிட்டு ஆஹா ஆரி நல்லா போட்டாரயா நங்கூரத்தை! என பதிவிட்டுள்ளார்.
பாலாவுக்கு பல்பு கொடுத்த ஆரி
பிக்பாஸ் புரமோவில் பாலாஜியை ஏறி விட்ட ஆரியை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் பாலாவுக்கு பல்பு கொடுத்த ஆரி என பதிவிட்டுள்ளார்.
ஆட்டம் அட்ராசிட்டிதான்
மற்றொரு நெட்டிசனான இவர், ஆரியின் கோபத்தை பார்த்து, இதோ ஆரி ஆரம்பிச்சிட்டாரு.. அப்புறம் என்ன.. ஆட்டம் அட்ராசிட்டிதான்.. என பதிவிட்டுள்ளார்.
ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சுடோய்
டாஸ்க்கின் போது பாலாஜி முருகதாஸிடம் ஆரி சண்டை போட்டதை பார்த்த இந்த நெட்டிசன், ஆஹா... ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சுடோய்.. என பதிவிட்டுள்ளார்.
நம்ம ஆரியா இது
ஆரி சண்டை போடும் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், நம்ம ஆரியா இது!... அட்வைஸ் பண்றாருன்னு சொன்னதுக்கு, இப்போ இங்க கோபத்தை காட்டுறாரே என ஆச்சரியப்பட்டுள்ளார்.
சண்டை நல்லா வரும்போல
மற்றொரு நெட்டிசனான இவர் புரமோவில் ஆரி சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரிக்கும் சண்டை நல்லா வரும்போலதான் தெரியுது என பதிவிட்டுள்ளார்.
வேற ஏதாவது செய்யலாம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி இந்த விளையாட்டு விளையாடுறதுக்கு நீங்க வேற எதாவது செய்யலாம் என்கிறார். இதற்கு ரியோ, பாலாஜி முருகதாஸ் கண்டிப்பா எதாவது வம்பு இழுக்குற மாதிரி பண்ணுவானுங்க போல இருக்கு என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











