பார்வையிலேயே ஒரு திமிர் தெரியுதே பாப்பா.. அனிதாவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத், தான் மட்டுமே புரமோவில் இடம் பெற வேண்டும் நாடகம் நடத்தி வருவதாக நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

Anitha Sampathன் Strategy நல்ல பண்றீங்க மா | Suresh | Anitha

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத்துதான் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

நாள்தோறும் ஏதாவது ஒரு ஏழரையை இழுத்து விடுகிறார். குறிப்பாக மூத்த நடிகரான சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அனிதாவுக்கும் ஆகவே இல்லை.

நெகட்டிவ் விமர்சனம்

நெகட்டிவ் விமர்சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது எவ்வளவு பாஸிட்டிவ் விமர்சனங்களை பெற்றாரோ அதைவிட பல மடங்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறார். நேற்றைய எபிசோடில் வீணாக சுரேஷ் சக்கரவர்த்தியை அனிதா சீண்டியது கண்கூடாக தெரிந்தது.

பிரச்சனையை கிளப்பினால்

பிரச்சனையை கிளப்பினால்

நக்கலாக கமெண்ட்டடிப்பது, நக்கலாக சிரிப்பது என வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் தன்பாட்டுக்கு பேசி வருகிறார். ஏதாவது பிரச்சனையை கிளப்பிக்கொண்டே இருந்தால் பிக்பாஸ் புரமோக்களில் இடம் பெற்று விடலாம் என்றும் தீர்க்கமாக நம்புகிறார் அனிதா சம்பத்.

செய்வதையெல்லாம் செய்துவிட்டு

செய்வதையெல்லாம் செய்துவிட்டு

அதனாலேயே வயதில் மூத்தவரான சுரேஷ் சக்கரவர்த்தியை வம்பிழுத்து வருகிறார். செய்வதையெல்லாம் செய்துவிட்டு பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, பின்னர் கெட்டப் பெயர் வந்து விடுமோ என கதறுகிறார். எல்லா விஷயத்துக்கும் கண்ணீர் விட்டு, அழுது அனுதாபத்தை சம்பாதிக்க பார்க்கிறார் அனிதா சம்பத்.

வம்படியாக சீண்டும் அனிதா

வம்படியாக சீண்டும் அனிதா

சுரேஷ் சக்கரவர்த்தி தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும் அனிதாவின் வாய் சும்மா இருப்பதில்லை. வம்படியாக அவரை சீண்டுகிறார். இந்நிலையில் இன்று இதுவரை வெளியான இரண்டு புரமோக்களிலுமே, அனிதாதான் மையப்படுத்தப்பட்டுள்ளார்.

தெனாவட்டும் திமிரும்

தெனாவட்டும் திமிரும்

அந்தளவுக்கு டிராமா பண்ணி வருகிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள், அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அனிதாவின் பார்வை பேச்சு என அனைத்திலுமே ஒரு தெனாவட்டும் திமிரும் தெரிகிறது என்றும், எதிர்பார்த்த அளவுக்கெல்லாம் அனிதா ஒன்றும் சூப்பர் கேரக்டர் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

சிக்கி சீரழியிற..

சிக்கி சீரழியிற..

அனிதா பேசும் பேச்சை பார்த்த இந்த நெட்டிசன், யம்மா!.. நீ செய்தி வாசிக்க சரிப்பட்டு வரமாட்ட!.. வேற நல்லவேலை பார்க்கலாம்! என வடிவேலு ஸ்டைலில் கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதாவின் புரமோவை பார்த்துவிட்டு, அவ்ளோ கஷ்டப்பட்டு வந்தவ ஏன் பாத்திட்டு இருக்கிற வேலையை விட்டு இங்க வந்து சிக்கி சீரழியிற....என்று கேட்டுள்ளார்.

புரமோவில் அதிகம்

புரமோவில் அதிகம்

மற்றொரு நெட்டிசனான இவர், அந்த பெருசுக்கிட்ட வாயை கொடுக்காம இருந்திருந்தா இன்நேரம் எங்கேயோ போய்யிருப்ப அனிதா! என்று கூறியிருக்கிறார் இவர். நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அதிகமாக புரமோவில் இவர் முகம் தான் அதிகம் காட்டப்படுகின்றது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X