இந்தம்மா வெறும் பில்டப்புதான் கொடுக்கும்.. காமெடி பீசு.. விஜே அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விஜே அர்ச்சனாவை நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் விஜே அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார்.
விஜே அர்ச்சனாவின் என்ட்ரி இன்றைய முதல் புரமோவின் மூலம் தெரியவந்துள்ளது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனா குறித்த தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
காமெடி பீசு
அர்ச்சனாவின் என்ட்ரியை பார்த்த இந்த நெட்டிசன், இந்தம்மா வெறும் பில்டப்புதான் கொடுக்கும்! காமெடி பீசு! என கூறியுள்ளார்.
கம்மி சம்பளம் போல
மற்றொரு நெட்டிசனான இவர், பாவம் ஜிதமிழ் டிவில கம்மியாக சம்பளம் தந்து இருப்பாக போல அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அர்ச்சனா!! என கூறியுள்ளார்.
எரிச்சல்தான் மிஞ்சும்
அர்ச்சனாவின் வருகையை பார்த்த இந்த நெட்டிசன், அந்தம்மா தேய்ஞ்சு போன ரெக்கார்டர் மாதிரி வளைச்சு வளைச்சு அதையே பேசும்பா!... நமக்கு எரிச்சல்தான் மிஞ்சும்! என இப்போதே கணித்து விட்டார்.
ஸ்க்ரிப்ட் ரெடி ஆகலையா?
மற்றொரு நெட்டிசனான இவர் என்னங்கடா ஆரம்பிச்சு பத்து நாளுலையே வெளியிருந்து ஆள் கூட்டிட்டு வர ஆரமிச்சிட்டீங்க, அப்ப இன்னும் ஸ்க்ரீப்ட் ரெடி ஆகலையா.. வேற ஆளே கிடைக்கலையாடா உங்களுக்கு.. என கேட்டுள்ளார்.
கஸ்தூரி போலதான்
அர்ச்சனா வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்ததை பார்த்த இந்த நெட்டிசன். இந்த அர்ச்சனா ஆர்பாட்டமா உள்ளே வந்தாலும் போன சீசன் கஸ்தூரி போலதான்!...கம்முனு நடையை கட்டும்! என கிண்டலடித்துள்ளார்.
எல்லா சரக்கையும் இறக்கிட்டா எப்படி?
மற்றொரு நெட்டிசனான இவர், யோவ் பிக்பாஸ்! ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது!.. அடக்கி வாசிப்பா! எல்லா சரக்கையும் முதல்லேயே இறக்கிட்டா எப்படி? என கேட்டுள்ளார்.
அய்யோ பாவம்தான்
அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், என்னைக்குமே எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தரும்!... இந்த அர்ச்சனா அய்யோ பாவம்தான் என கூறியுள்ளார்.
பேசியே சாகடிக்கும்
அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்மா இந்த பொம்பளைய யாருமா உள்ள கூட்டியாந்தது, பேசியே சாகடிக்குமே இது என நொந்துபோயுள்ளார்.
எச்சக்கைய தூக்கினா..
விஜே அர்ச்சனா உள்ள வந்ததால பிரியங்காவோட பேஸ்மெண்ட்டுக்கு ஏதும் பிரச்சினை வந்திடாதில்லன்னு கேக்கிறவுங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன்.. இரண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சதில்ல! எச்சக்கையத் தூக்கினா ஆயிரம் காக்கா! அவர்கள் யாரும் ஒரே சேனலை சார்ந்து இல்லை என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ரொம்பவே நம்புறோம்
போடு ரக்கிட ரக்கிட.. இனிமேல் ஆட்டம் வேற மாதிரி போக போகுது ஓகே.. அர்ச்சனா தயவு செய்து லாஸ்ட் சீசன் கஸ்தூரி மாதிரி புஸ்ன்னு போய்டாதிங்க என கும்பிடு போட்டுள்ள இந்த நெட்டிசன் நாங்க உங்கள ரொம்பவே நம்புறோம் என்று கூறியுள்ளார்.
தரமான சம்பவங்கள்
மற்றொரு நெட்டிசனான கடுமையான போட்டியாளர் அர்ச்சனா.. பிக்பாஸ் வீட்டிற்கு வரவேற்கிறோம்.. இனி தான் தரமான சம்பவங்கள் காத்துட்டு இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











