எச்சில் தெறிக்கல.. பேச்சுல அனல் தெறிக்குது.. கமலின் பேச்சை பார்த்து மெர்சலான நெட்டிசன்ஸ்!
சென்னை: புரமோவில் கமல் ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை வறுத்தெடுத்ததை பார்த்த நெட்டிசன்கள் பூரிப்படைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் நடிகர் கமல்ஹாசன், எச்சில் விவகாரத்தில் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தியை விளாசி வருகிறார்.
அதனை பார்த்து செய்தி வாசிப்பாளர் அனிதா, அறந்தாங்கி நிஷா ஆகியோர் செமயாய் சிரித்து மகிழ்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பக்கம் கமலை விமர்சித்தும் மறுப்பக்கம் பாராட்டியும் வருகின்றனர்.

ஈலோகத்தில்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அந்த 7 நாட்கள் பாக்கியராஜ் ஸ்டைலில், ஈலோகத்தில் ஒரு பிரச்சனையை இந்த அளவுக்கு சாதுர்யமாய் முடித்து வைக்கும் திறமை உண்டெங்கினிள் அது எங்கட ஆண்டவர் ஒருத்தர் மட்டுமே சாரே... என புகழ்ந்துள்ளார்.

வேலை செய்யுது
மற்றொரு நெட்டிசனான இவர், சனிக்கிழமை வந்துட்டா போதும் சின்ராச கைலயே புடிக்க முடியாதே என கிண்டலடித்துள்ளார்.
புரமோவை பார்த்த இவர், கமல் இந்த மாதிரி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லையே...,கடைசி ரெண்டு சீசன்ல பட்டது வேலை செய்யுது என கூறியுள்ளார்.

வேலைக்கு ஆகாது
மற்றொரு நெட்டிசனான இவர் தலைவா இப்படி வெகுஜன மக்களுக்கு சென்று சேர்கிற வகையில் எளிமையா பேசுங்க... சில பேர் நீங்க பேசுறது புரியலைன்னு சொல்லி சொல்லி மக்கள் மத்தியில் நீங்க பேசுனா புரியாது அப்படிங்கிற ஒரு உளவியலை உருவாக்கிட்டு இருக்காங்க... இங்க சுத்த தமிழ் செந்தமிழ் எல்லாம் வேலைக்கு ஆகாது... என்று கூறியுள்ளார்.

ஏசியை குறைத்து வையுங்கள்
புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர் கமலின் குரலில் நடுக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கமல் சார் அவர்களுடைய குரல் தெளிவாக இல்லை போல. வார்த்தைகள் நடுக்கம் காணுது. அந்த ஏசியை கொஞ்சம் குறைத்து வையுங்கள் என கூறியுள்ளார்.

அனல் தெறிக்குது..
டாப் கியர்.. தெறிக்குது.. எச்ச இல்ல.. உங்கள் பேச்சுல அனல். ஒரு வார சண்டைய ஒரு செகண்ட் புரமோவில் ஒன்னும் இல்லாம ஆக்கிட்டீங்க.. அதுவும் நகைச்சுவையாக.முழு நீள காமெடி படத்தில் நடிச்ச உங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று கூறியுள்ளர் இந்த நெட்டிசன்.

சாமளிப்பிக்கேஷன்
மற்றொரு நெட்டிசனான இவர், எப்படியும் கமல் சார் யாரையும் நேரடியா திட்ட மாட்டாரு! அதுவும் இது முதல் வாரம்..
எப்பவும் போல சாமாளிப்பிக்கேஷன் தான் போல! என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











