என்னடா.. அழுகாச்சி சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிடீங்க.. ரொம்ப வொர்ஸ்ட்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பாரத்த நெட்டிசன்கள் செம கடுப்பாகி திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் சாதாரணமாகவே கதறி வருகின்றனர். சின்ன சின்ன விஷங்களையும் பெரிதுப்படுத்தி பிரச்சனையாக்கி கதறி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் பெண்கள் எப்போதும் கண்ணீரும் கம்பளியுமாய் திரிகிறார்கள் என்றால் ஆண் போட்டியாளர்களும் நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டு கண்ணீர் வடித்து வருகின்றனர்.

கதறாத குறையாக புலம்பல்

கதறாத குறையாக புலம்பல்

இதையே தாங்க முடியாத நிலையில் திணறி வருகின்றனர் பார்வையாளர்கள். இந்நிலையில் இன்று அழுவதற்கு என்றே ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அதனை பார்த்த நெட்டிசன்கள் கதறாத குறையாக புலம்பி தீர்த்துள்ளனர்.

அழுகாச்சி சீரியல்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்னாங்கடா இது!.. அழுகாச்சி சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிடீங்க! அடப்பாவிகளா!... என பங்கம் செய்துள்ளார்.

சித்ரவதை பண்ணாதீங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்படி அழவச்சு எங்களை சித்ரவதை பண்ணாதீங்க பிக்பாசு.. என கதறியிருக்கிறார்.

காட்டுன மூஞ்சையே காட்டுறீங்க

புரமோவை பார்த்து கடுப்பான இந்த நெட்டிசன், அடேய் அறிவுகெட்ட விஜய் டிவி டாஸ்க் கொடுப்பீங்களா மாட்டீங்களா. காட்டுன மூஞ்சையே காட்டுறீங்க மத்தவனுங்களும் இருக்கானுங்கடா. இப்படி பேசுற டாஸ்க் கொடுத்தே 50 நாள் ஓட்டிடுவே. அப்பறம் அதுவே உனக்கு பழகிடும் உள்ளே இருக்குறவனுங்களுக்கும் பழகிடும். வொர்ஸ்ட்டுடா என விளாசியுள்ளார்.

எங்களுக்கு இருக்குடா யப்பா...

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இன்னைக்கு நிச்சயம் பாக்கப்போறது இல்லை! ஓயாம நினைவுகள் நினைவுகள்னு!
பாக்கிற எங்களுக்கு இதைவிட கொடூரமான நினைவுகள் இருக்குடா யப்பா! என சாடியிருக்கிறார்.

ஏன்டா படுத்துறீங்க..

நாடு விட்டு நாடு வந்து பெத்தவங்கள பாக்கமுடியாம
கொரோனாவால் வீட்டுல அடைஞ்சு கிடக்கிறோம் எங்க சோகக் கதையை கேட்க ஆளில்லை! ஏன்டா படுத்துறீங்க இப்படியே டாஸ்க் கொடுத்து என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

லைஃப் டைம் செட்டில்மெண்ட்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பிக் பாஸ் சீசன்ல அழாமல் இருக்கிற ஒரு கன்டெஸ்டன்ட்டையாவது காமிக்கிறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்டா.. என மரண பங்கம் செய்துள்ளார்.

சிறப்பிக்கணும்..

மற்றொரு நெட்டிசனான இவர், ஆரி, சனம் ரெண்டு பேரும் ஒரு குரூப்புக்கே வழியில்லாம தனியா அலையுதுங்க. வாரா வாரம் நாமினேட் ஆகுதுங்க. இருக்கிற மூணு குரூப்லயும் மெம்பரா இருந்து எல்லா வாரமும் நாமினேஷனுக்கே வராம தப்பிக்கிற திறமைக்கே சம்யுக்தாவுக்கு சிறப்பு விருது கொடுத்து கட்டாயமா சிறப்பிக்கணும் என கூறியுள்ளார்.

அழ வச்சுட்டான்

அனிதா அவ ஹஸ்பண்ட்ட நினைச்சு அழுததுக்கு கிண்டல் பண்ணாங்க. இப்ப பிக்பாஸ் அதையே டாஸ்க்கா கொடுத்து
எல்லாரையும் அழ வச்சிட்டான் என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

அர்ச்சனா ரொம்ப அதிகம்ப்பா

பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து முழுசா ஒரு மாசம் ஆகல., அதுக்குள்ள இவ்வளவு மன வருத்த படுறீங்களே. ராணுவத்தில் அரபு நாடுகளில், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வறுமை காரணமாக எத்தனை எத்தனையோ பேர், புதுசா கல்யாணம் பண்ணிட்டெல்லாம் போயிருப்பாங்க.. அர்ச்சனா படிக்கும் போது அழுவது ரொம்ப அதிகம்ப்பா என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X