நாமினேட் பண்ணும்போது கூட ஆட்டியூட் காட்டும் ரியோ.. கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாமினேஷன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரியோவை கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது இன்று வெளியான முதல் புரமோவில் தெரியவந்தது.
இதில் அதிகப்படியாக ஆரியையும் சுரேஷ் சக்கரவர்த்தியையும் ஹவுஸ்மேட்ஸ் நாமினேஷன் செய்துள்ளனர்.

டேமேஜாகும் ரியோ
குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தியை நாமினேட் செய்யும்போது ரியோ ராஜ் நக்கலாய் சிரித்தப்படி அவரது பெயரை கூறினார். இதனால் கடுப்பாகியுள்ளனர் நெட்டிசன்கள். சுரேஷை சீண்டி சீண்டி நாளுக்கு நாள் தனது பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார் ரியோ. இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டி வருகின்றனர்.

என்ன உலகமடா..
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி சாதரணமா பேசினாவே அது அட்வைஸ்தான்னு கூட்டமா சேர்ந்து கத்துறீங்க!.. என்ன உலகமடா! என நொந்து போய் கேட்டுள்ளார்.

ஒன்னு கூடிடாங்கடோய்!
மற்றொரு நெட்டிசனான இவர் சுரேஷும் ஆரியும் நாமினேட் செய்யப்பட்டதை பார்த்து, புளிமூட்டை குரூப்பு எல்லாம் ஒன்னு கூடிடாங்கடோய்! என கூறியுள்ளார்.

ஆக்டிங் அல்லக்கை
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன்ன, அழுது சீன் போடும் ஆக்டிங் அல்லகைகளை தூக்கி மொதல்ல வெளியே போடுங்கப்பா!..என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அது ஒரு குத்தமா?
ஆரி அதிகம் பேரால் நாமினேட் செய்யப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், ஒரு அறிவுரை சொன்னதெல்லாம் ஒரு குத்தமாடா? அடப்பாவிகளா! என கேட்டுள்ளார்.

இந்த வாட்டி ஆப்புதான்
ஆரியை அதிகம் பேர் நாமினேட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன் "அட்வைஸ்"ஆரிக்கு இந்த வாட்டி ஆப்பு தான் போல.. என பதிவிட்டுள்ளார்.

அட்வைஸ் பண்ணிடாதீங்க
எல்லோரும் ஆரியை டார்கெட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன்... இனி எவனுக்கும் அட்வைஸ் பண்ணிடாதீங்க!.. அழுதும் கேட்பானுங்க அப்பவும் சொல்லிடாதீங்க! என பதிவிட்டுள்ளார்.

என்ன பண்ணுவாங்க
மற்றொரு நெட்டிசனான இவர், ஆரி எந்த கேள்வி கேட்டாலும் அது ஒன் வரி பதில் இருந்தாலும் அவர் அதை ரெண்டு பக்கத்திற்கு மிகாமல் சொல்லாம விட மாட்டார் போல
பின்ன நாமினேஷன் பண்ணாம என்ன பண்ணுவாங்க என கேட்டுள்ளார்.

பல்பு வாங்கப்போற..
சுரேஷ நாமினேட் பண்றப்ப என்ன ஒரு பெருமிதம் ரியோ முகத்தில்.. தம்பி நீ வெளில வந்து பெரிய பல்பு வாங்கப்போற.. என எச்சரித்துள்ளார் இந்த நெட்டிசன்.

என்ன ஒரு ஆச்சரியம்
ரியோ நாமினேட் செய்வதை பார்த்த இந்த நெட்டிசன், நாமினேட் பண்ணுறதுல கூட ஓவர் ஆட்டியூட் காட்டுறான் இந்த ரியோ என கோபமாக கூறியுள்ளார். மேலும் அட்வைஸ் பண்ணி நாமினேஷன்ல வந்த முதல் ஆள்ஆரியாதான் இருக்கும்.. என்ன ஒரு ஆச்சரியம் ஷிவானி நேம் யாருமே சொல்லல என கூறியுள்ளார இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











