இவரு காதல் பண்ற மாதிரியா இருக்காரு.. காசாப்பு போடுற மாதிரி கரடுமுரடா இருக்காரே.. அட போங்கையா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை பங்கம் செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சயின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜியையும் ஷிவானியையும் கோர்த்து விட்டு காட்டியுள்ளனர்.
ஏற்கனவே அவர்களுக்குள் சாஃப்ட் கார்னர் உள்ள நிலையில் இன்றைய புரமோவும் அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் கொஞ்சம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

ஸ்டார்ட் ஆக மாட்டெங்குது!
பிக்பாஸ்சும் எத்தனையோ ரூட்டு போட்டு பயில்வானுக்கு கொடுக்கிறாரு!... ஆனா இந்த லவ்வு ஸ்டோரி மட்டும் இன்னும் சரியா ஸ்டார்ட் ஆக மாட்டெங்குது.. சோ சேட்! என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

இன்னொன்னு அழுகாச்சி
ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி.. பேஷ் பேஷ் நன்னா இருக்கு.. ஷிவானி ஆர்மி ரொம்பவே சந்தோஷத்துல இருப்பானுங்க.. அவளை இப்படியாவது அடிக்கடி காட்டுறானுங்கலேனு.. பாரதி கண்ணம்மாவுல கூட ஒரு வாரம் நடக்குற டாஸ்க் கொடுத்தானுங்கடா என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்ஸ்

கரடு முரடா இருக்காரே..
யோவ் பிக்பாசு!... இந்த பயில்வான் காதல் பண்ற மாதிரியா இருக்காரு!... காசாப்பு போடுற ஆள் மாதிரி... கரடுமுரடா இருக்காரே!. என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மேட்ரிமோனி புரோகிராம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவனுங்க ஷோ நடத்துறான்களா இல்லைனா மேரேஜ் மேட்ரிமோனி புரோக்ராம் நடத்துறான்களானே தெரியலையே என தெரிவித்துள்ளார்.

அட போங்கையா
மற்றொரு நெட்டிசனான இவர், எந்த பிக்பாசு காதலும் கரைசேரல! எல்லாம் ஓட்டு வாங்க மட்டும்தான்.. அட போங்கையா!. என ரைஸா ஸ்டைலில் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

என்ன கருமம் இது
கேப்ரியல்லா ஷிவானியவிட ஒருவயசு பெரிய பொண்ணு.. அவள பாலா தங்கச்சி சொல்றான்...இவள க்ரஷ்னு சொல்றான். என்ன கருமம் இது என கேட்டு துப்பியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











