என்ன பயில்வான்.. நீங்க கொஞ்சம் ராங்கா போற மாதிரி தெரியுது.. புரமோவை பார்த்து பொங்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 | Promo 3 | October 28

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில், அம்மியில் அரைக்க விட்ருவேன் என்று கூறிய பாலாஜியை அர்ச்சனா மற்றும் அவரது குரூப்பை சேர்ந்தவர்கள் கட்டம் கட்டுகின்றனர்.

நிஷா, ரியோ, வேல் முருகன் என அர்ச்சனாவின் ஆதராவாளர்கள் பொங்கி விட்டனர். இந்த புரமோவை பார்த்த் நெட்டிசன்கள், தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

என்னதான் நினைச்சுகிட்டு இருக்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஏதோ குடிச்சிக்கிட்டே அசால்டா பதில் சொல்றியே! உன் மனசுல என்னதான் நினைச்சுகிட்டு இருக்க! என பாலாஜியை கேட்டுள்ளார்.

இன்னொரு பிரச்சனையா..

மற்றொரு நெட்டிசனான இவர், அடேய் இருங்கடா இன்னும் ஒரு பிரச்சனையே முடியல அதுக்குள்ள இன்னொரு பிரச்சனையா.. சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பாலாஜி முருகதாஸ் ரெண்டு பேரும் என்ன பண்ணாலும் அது சரிதான் அப்படித்தானே மக்களே என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ராங்கா போற மாதிரி

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், என்ன பயில்வான்.. நீ கொஞ்சம் ராங்கா போற மாதிரிதான் தெரியுது.. அப்புறம் ரணரணமா ஆகிடும்!... ஆமா என பதிவிட்டுள்ளார்.

இந்த பொழப்புக்கு

ரியோ.. அர்ச்சனா.. நிஷா.. வேல்முருகன்.. இவங்க எல்லாரும் பாலாஜி வெளியே போகனும்னு நினைக்கிறாங்க இந்த பொழப்புக்கு.. தூ.. தூ.. என துப்பியுள்ளார் இந்த நெட்டிசன்.

பெரிசு பண்ணாதீங்

மற்றொரு நெட்டிசனான இவர், சரி சரி விடுங்க பயில்வான் குழந்தை தெரியாம சொல்லிடுச்சி பெரிசு பண்ணாதீக! என டிவிட்டியுள்ளார்.

அம்மியெல்லாமா இருக்கு

அம்மியில அரைச்சததானே திங்கிற என அர்ச்சனா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், பாலஜியை மானஸ்தன் இனி சோத்தில கை வைப்பானா என்றும் அது சரி! பிக்பாஸ்ல அம்மியெல்லாமா இருக்கு! என்றும் கிண்டலாக கேட்டுள்ளார்.

டாஸ்க் கொடுத்துட்டாலும்

மற்றொரு நெட்டிசனான இவர், சத்தமா பேசாதீங்கடா பர்ஸ்ட் சீசன் உரல் டாஸ்க் மாதிரி அம்மீல அரைக்கிற டாஸ்க் கொடுத்துட போறனுக.. இவ்வளவு ஹின்ட் கொடுத்தும் இவனுங்க உருப்படியா டாஸ்க் கொடுத்துட்டாலும்.. என அலுத்துக்கொண்டுள்ளார் இந்த நெட்டிசன்.

குள்ளநரிக்கூட்டம்

மற்றொரு நெட்டிசனான இவர், பாலா அன்னைக்கு சொன்னது: ரியோ நாலு பேரை சம்பாதிச்சு வெச்சிருக்காரு. ஒருத்தரை குத்தினா அவங்க நாலு பேரும் சேந்து வந்து குத்துவாங்க. அது இப்போ நிரூபணம் ஆகியிருக்கு. மத்தபடி பாலா சொன்னது என்ன, குள்ளநரிக்கூட்டம் கூவுரது எதுக்குன்னு எபிசோட் பாத்தா தான் தெரியும் என கூறியுள்ளார்.

ஜால்ரா கய்ஸ்

மற்றொரு நெட்டிசனான இவர், தப்பு பண்ணீட்டீங்க பாலா பிரதர். அம்மி அறைக்க விடறேன்.. கேள்வி கேட்டா எல்லாத்தையும் கும்மி அடிக்க விடறேன்னு சொல்லியிருக்கனும்... திஸ் ரியோ ஜால்ரா கய்ஸ்.. என கலாய்த்துள்ளார்.

ஷிவானி பாப்பா கூட..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் குழந்தை ஏன் அம்மிய பத்தி பேசுது? பால் குடிச்சிட்டு ஓரமா ஷிவானி பாப்பா கூட விளையாடலாமே! என கூறியுள்ளார்.

டார்கெட் பண்றாங்க..

மற்றொரு நெட்டிசனான இவர் பாலாவ டார்க்கெட் பண்றாங்க.. இப்ப இவங்க பண்றதுதான் குரூப்பீஸ்சம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X